View allAll Photos Tagged mudaliyar

இதுபோல் அனைத்து ஊர்களிலும் செய்து நமது சமுதாயத்தின் இருப்பை நிரூபிக்க வேண்டும் instagr.am/p/CyYqpJapCIt/

நாளை வாகன பேரணிக்கு அனைவரும் வருக... instagr.am/p/Cx7XF1woG0a/

October 04 கொடிகாத்த திருப்பூர் குமரன் @ குமாரசாமி முதலியார் பிறந்த நாளன்று நீங்கள் வாழும் ஊரில் ஐயாவின் திருவுருவப் படத்தை வைத்து ஐயாவின் பிறந்தநாளை கொண்டாடி 50 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குங்கள்.

 

இதுவே நம் முன்னோராகிய தேசபக்தர் ஐயா கொடிகாத்த குமரனுக்கு நாம் செய்யும் மரியாதையாகும் instagr.am/p/Cx4e_7Joqvx/

சென்னை பெருநகர் செங்குந்தர் சங்கம் ஐம்பெரும் விழா.. instagr.am/p/Cx3UhhRIcgI/

பேராசிரியர் கே.ஏ.நடராசன் செங்குந்தர் மறைந்தாரே

*****************************************

பேராசிரியர்.மு.நாகநாதன்

=============================

ஈரோடு என்றால் போராடு

என்ற உணர்வு தந்தை பெரியாரை

பின் பற்றுபவர்கள் போற்றிய பகுத்தறிவு நெறியாகும்.

 

மறைந்த நண்பர் நடராசன்

சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும்,

 

இறுதி வரை பகுத்தறிவு சார்ந்த போராட்ட உணர்வை பெற்று இருந்தார் .

 

அறிஞர் அண்ணா மீது பெறும் பற்றுக்கொண்ட பேராசிரியர் நடராசன் அண்ணா பிறந்தநாளில்

நேற்று இரவு காலமானார்.

 

பெரியார் மீது அளவற்ற மதிப்பை

வைத்து இருந்தார்.

 

தந்தை பெரியார் தலைமையில்

இவரது திருமணம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்றது.

 

இவரது வாழ்விணையர் பேராசிரியர்

மோகனா தேவியும் பெரியார்

கொள்கையை போற்றுபவர்.

 

பெரியார் காலத்தில் தொடங்கப்பட்ட

பகுத்தறிவாளர் கழகத்தின்

செயலராக நண்பர் கே.ஏ.நடராசன்

பணியாற்றினார்.

 

அன்னை மணியம்மையார்

ஆசிரியர் வீரமணியார்

ஆகியோரோடு அன்போடு பழகியவர்

 

பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார முதுகலை

மாணவராக இருந்தபோது

திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக பணியாற்றிவர்.

 

சென்னை மாநிலக் கல்லூரியில்

பொருளாதார துணைப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றி பின்பு ,

 

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையில் 1987 ஆம் ஆண்டு இணைப்பேராசிரியாக இணைந்தார்.

 

பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முக சுந்தரனாரிடம் தான்

முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.

 

பொருளாதாரத்துறையின் 1987 ஆம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன்.

எனக்கு உற்ற துணையாக,நேர்மிக்க

பேராசிரியராகப் பணியாற்றினார் .

 

பெரியார் கொள்கையை சமரசமின்றி

கடைப்பிடித்தவர்.

 

பேராசிரியர் கே.ஏ.நடராசன்

மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளித்தது.

 

சில மாதங்களுக்கு முன்பு

நண்பர் கே.ஏ.நடராசனை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன்.

 

அரை நூற்றாண்டு நட்பு

அறுந்து விட்டதே என்று துயர் கொள்கிறேன்.

 

அவரது வாழ்விணையர் பேராசிரியர் மோகனாதேவி

மகன் பொறியாளர் கே.ஏ.என்.ராசா

மகள் மணிமலர் ஆகியோருக்கும்,

 

அவரது அண்ணன் பொறியாளர்

கே.ஏ.மாரியப்பன், அவரது தம்பி கணக்காயர் கே.ஏ.முருகானந்தம்,

 

அவரது உறவினர்களுக்கும்

எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

பெசன்ட் நகர்

மின் சுடுகாட்டில் இன்று மாலை 4.30 மணி

இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறும். instagr.am/p/CxUZZdNoJi0/

திருப்போரூர் முருகன் கோவில் கொடிசேலை முதல் மண்டகப்படி உபதாரர்கள் தொன்று தொட்டு செம்பாக்கம் செங்குந்த முதலியார் instagr.am/p/CxUZBHxoKR5/

தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) தந்தை செங்குந்தர் குல ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் கல்வி அறக்கட்டளை கல்வி ஊக்கபரிசு மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா - 2023 நெய்வேலி, கடலூர் மாவட்டம்

 

#kaikolar #muthaliyar

#sengunthar #cuddalore

#lordmurugan #surasamharm

#veerabhagu #tamil instagr.am/p/CxSy_sEouiu/

நெசவாளர் நேசனின் நினைவு நாள் ...!!!

.

சுதந்திரப் போராட்ட வீரர்

 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் அனைத்து சமுதாயத்தினரும் ஆலய பிரவேசம் செய்திட போராட்டம் நடத்திய பெருந்தகை

 

இந்திய விடுதலைக்காக ஆறு மாத காலம் ஆந்திர மாநிலம் அலிபுரத்தில் சிறைவாசம் செய்தவர்.

 

திருச்செங்கோடு கைத்தறி கூட்டுறவாளர் சங்கத்தை துவக்கி வைத்து தமிழக அளவில் இந்த சங்கத்திற்கு நற்பெயரை ஏற்படுத்தியவர்.

 

இந்தியாவிலேயே 3000 சதுர அடிகளுக்கு மேல் கொண்ட வீட்டு மனைகளை உள்ளடக்கிய நெசவாளர் காலனி என்னும் மாபெரும் நகரை நிர்மாணித்தவர்.

 

தியாகச் செம்மல் காந்தியவாதி கறை படியாத கரத்திற்கு சொந்தக்காரர்

 

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த விளங்கும்

 

அமரர் காசி விஸ்வநாதர் முதலியார்

 

அவர்களின் நினைவு நாளில் மாபெரும் அந்தத் தலைவரின் தியாகத்திற்கும் , தன்னலமற்ற பொது சேவைக்கும்

 

தேசிய சிந்தனை பேரவை

 

தலை வணங்கி புகழாஞ்சலி செலுத்துகிறது ...

.

திருநாவுக்கரசு

தலைவர்

தேசிய சிந்தனை பேரவை ... instagr.am/p/CxC7AYrIT76/

பழனி வட்டம் வேலாயுதம்பாளையம்புதூர் செங்குந்தர் முத்துக்குமாரசாமி கோவில் குடமுழுக்கு விழா #palani instagr.am/p/CwoiST2o2Kz/

இதுபோல் அனைத்து ஊர்களிலும் செய்யவேண்டும். instagr.am/p/CwiI8i7I3hv/

ஒட்டகூத்தர் செங்குந்தர் இளைஞர் அணிசெவல்பட்டி, விருதுநகர் மாவட்டம், PSR பொறியியல் கல்லூரி அருகில்.

 

இதுபோல் எத்தனை ஊரில் நம் முன்னோர்களுக்கு மரியாதை கொடுத்து பெயரை சேர்க்கிறார்கள் instagr.am/p/CwcUzwOIuzh/

பழனி செங்குந்தர் தர்மபரிபாலன சபையில் நடைபெற்ற திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றதுj instagr.am/p/CwYFKR5x6C8/

நாமக்கல் குமாரபாளையம் #சின்னநாயக்கன்பாளையம்

#செங்குந்தர் சமுதாய அரங்கம் instagr.am/p/CwSAxSxIx95/

கடலூர் மாவட்ட செங்குந்தர் திருமண அழைப்பிதழ் பத்திரிக்கை

 

பத்திரிக்கையில் குலகுரு சோள பேரரசு ஒட்டக்கூத்தர் முதலியார், கிருபானந்த வாரியார், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனர் ஜம்புலிங்கம் முதலியார் மற்றும் குல கடவுள் முருகன்.

 

தரமான பத்திரிக்கை

உண்கை செங்குந்தர் உணர்வு உள்ள குடும்பம்.

#cuddalore #nlc #ottakoothar instagr.am/p/CwMgCcjpWDF/

அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நமது செங்குந்தர் குல உறவு முன்னாள் MP, MLA திரு. கோபால் மற்றும் அவரது புதல்வர் சோளிங்கர் முன்னாள் MLA திரு. பார்த்திபன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தபோது. instagr.am/p/Cv8MgU7o6ff/

நான்கு மாநிலங்கள் ஆளுநர் மற்றும் இந்திய உளவுத்துறை ரா அமைப்பின் முன்னாள் தலைவர்

*#T.V.ராஜேஷ்வர் செங்குந்தர்.,IPS*

பிறந்தநாள் இன்று

#kaikolar #namakkal

#Mudhaliyar #weaver

#chola #tamil #Kongu_sengunthar instagr.am/p/CvwFQ1OJl0H/

செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் புத்தகத்தை தொகுத்த தொல்லியல் அறிஞர் புலவர் செ. இராசு கவுண்டர். instagr.am/p/CvtnDHTJaEx/

இன்முகத் தென்றல் ஈகை செம்மல் முதலியார் கல்வி அறக்கட்டளையின் முன்னோடி

ஒப்பாரும் மிக்காரும் இல்லா ராணா K.V. லட்சுமணன் முதலியார் அவர்களின் 23 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கவுந்தப்பாடி வட்டார முதலியார் பேரவையின் சார்பில் இன்று இ ஐ டி கல்லூரி வளாகத்திலும் கவுந்தப்பாடி நால்ரோடு பகுதியிலும் நடைபெற்றது

 

#Erode instagr.am/p/CveUk5ipE0D/

சேலம் அம்மாபேட்டை

செங்குந்தர் மாரியம்மன் கோவில் விழா.

 

இதுபோல் உங்க ஊரில் செய்ய முடியுமா? instagr.am/p/CvaZn8ItBEc/

காலம் போற்றும் முன்னாள் முதல்வர் காமராஜரை முதல்வராக வர வைத்த இரண்டு தளபதிகள் ஒன்று திருப்பத்தூர் சண்முக முதலியார் exMLA எம்எல்ஏ மற்றும் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் ex எம்எல்ஏ.

 

தமிழகத்தில் ராஜாஜி சில்வர் பதவியிலிருந்து இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது அப்போது காமராஜர் முதல்வராக வேண்டும் என்று தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் மேலும் செங்குந்த முதலியார்கள் அதிகம் வாழும் தொகுதியான குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து வெற்றி பெற எம்எல்ஏவாக வெற்றி பெற வைத்தவர் திருப்பத்தூர் சண்முகம் முதலியார் மற்றும் குடியாத்தம் அருணாச்சலம் முதலியார் இதன் பிறகு காமராஜர் முதல்வராக பதவியேற்க முடிந்தது instagr.am/p/CutrRf6IT2y/

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செங்குந்த முதலியார் கொடியேற்றம்.. instagr.am/p/Cudre8fIU-q/

திருத்தணி, சுவாமிமலை செங்குந்தர் சத்திரம்.. instagr.am/p/CuJZ7eIRCPM/

பழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றம் முதல் மண்டபடை செய்யும் உரிமை உள்ள குடும்பம் வையாபுரி நாட்டுப் பட்டக்காரர் முத்துக்காளி தரகன் முதலியார் வம்சம் instagr.am/p/CuJPt7CR2-g/

கோவை மருதமலை முருகன் கோவில் அடிவாரம் instagr.am/p/CuGwspMoDfs/

சென்னிமலை முருகன் கோவில் செங்குந்த முதலியார் தங்க கொடிமரம் instagr.am/p/Ct9o6Shp6EX/

பழனி திருமண விழா மற்றும் தங்குவதற்கு செங்குந்தர் திருமண மண்டபம் தொடர்பு கொள்ளுங்கள். instagr.am/p/Ct76t2Zogqv/

அனைத்து உறவுகளுக்கும்

 

*தொண்டு மன்ற தினம் வாழ்த்துக்கள்*

 

24.06.1984 அன்று நமது நிறுவனர் தெய்வத்திரு.

DAS பிரகாசம் செங்குந்தர் IAS அய்யா அவர்கள் ஒருமித்த கருத்தை கொண்ட நல்ல உள்ளங்களை இனைத்து செங்குந்தர் சமூகத்துக்காக *சமுதாயப் பொருளாதாரத் தொண்டு மன்றத்தினை* நிறுவிய நாள்.

 

அய்யா அவர்களை வணங்குவதோடு அவரின் விருப்பத்தை நிறைவேற்ற தொண்டு மன்றத்தில் நம்பிக்கை கொண்டு *அறக்கட்டளைகள் நிறுவியுள்ள நல் உள்ளங்களையும், நன்கொடை வழங்கியுள்ள மற்றும் தொடர்ந்து வழங்கி வரும் அனைவரையும்*

 

வணங்குகிறேன். 39 வது ஆண்டு விழா instagr.am/p/Ct5x-C6ptj1/

தினத்தந்தி நாளிதழில் வள்ளல் ஜம்புலிங்கம் முதலியார் வாழ்க்கை வரலாறு... instagr.am/p/Ct1w_Uwpuqy/

இன்று அய்யாவின் பிறந்த தினம் instagr.am/p/CtxpkB0Jpsf/

June 22 ஐய்யாவின் பிறந்தநாளை அனைவரும் பெரிய அளவில் எடுத்து செல்ல வேண்டும்.

 

நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) தந்தை

கொடைவள்ளல்

சுதந்திரபோராட்டவீரர்

*ராவ்பகதூர் T.M.ஜம்புலிங்கமுதலியார்‌*

(கடலூர் முன்னாள் சேர்மேன்)

 

1.தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் NLC நிறுவனம் உருவாக காரணமாக இருந்து தனது *640 ஏக்கர் நிலம் தானமாக* வழங்கினார்.

 

2.தென்னாற்காடு பகுதியில் ஆங்கிலேய அரசால் தமிழ்குடிகள் மீது போடப்பட்ட *குற்றப் பரம்பரை சட்டத்தை* எதிர்த்து போராடி அதில் வெற்றி பெற்று தமிழ் மக்களை கொடுமையில் இருந்து காப்பாற்றியவர்.

 

3.சேலம்- கடலூர் ரயில் பாதை அமைய முக்கிய காரணமானவர்.

 

4.பல்வேறு மக்கள் பணிகள்,கல்வி, மருத்துவம், ஆன்மீகம் பெரும் நிதியுதவி அளித்தவர்

 

(T. M. Jambulingam Mudaliar, 22 சூன், 1890 - 28 அக்டோபர், 1970) instagr.am/p/Cto0nQmxk_B/

பழனி செங்குந்தர் தர்ம பரிபாலன சபைக்கு கொண்டுவரப்பட்ட பழனி முருகன் கோவில் செங்குந்த முதலியார் சமூக சூரசம்கார மண்டகப்படிக்கான 1703ஆம் ஆண்டு செப்பு பட்டையைத்துடன் தலைவர் S.K.C. சண்முகவேல் முதலியார் செயலாளர் A.பரமசிவம் முதலியார் மற்றும் சபை நிர்வாகிகள். instagr.am/p/CtTeDJpJRYj/

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலை, கிழிருந்து படிகட்டு முதல் மண்டபம். எழுகரை நாடு செங்குந்தர் முதலியார் மண்டபம்

#kaikolar_history instagr.am/p/Cs4AezdpKPH/

செங்குந்தர் கைக்கோள முதலியார்

 

⚜️குலத் தோன்றல்⚜️

 

ஈரோடு கல்விதந்தை, கொங்கு மண்டலத்தில் பெண்கள் கல்விக்கு பாடுப்பட்டவர், ஈரோடு முன்னாள் நகர்மன்ற தலைவர், சுதந்திர போராட்ட வீரர். OC பிரிவில் இருந்த செங்குந்த கைக்கோளர் சமுதாயத்தை BC பட்டியலுக்கு கொண்டு வந்தவர் கொண்டு வந்தவர்

 

#kaikolar_history instagr.am/p/CsNmX9NJ03Q/

10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

#kaikolar_history instagr.am/p/CsDWRyJJtNV/

ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் முதலியார் என்று சொல் இடம்பெற்றுள்ளது🙏🙏🙏🙏

#kaikolar_history instagr.am/p/CrtT3-EJW9-/

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தொன்று தொட்டு சீர்பாத் சேவை செய்து வரும் கீரை தின்னி முதலியார் பங்காளி வகையறா

 

#kaikolar_history instagr.am/p/CrheX58p-nZ/

சோழநாடு துறையூர் செங்குந்தர் வேம்பழகு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா. #kaikolar_history instagr.am/p/CrXbgTGJy7Y/

தெய்வதிரு முருகேச முதலியார் ஐயாவின் பிறந்த தினம் இன்று பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார். பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார். (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கம் இதுவே ஆகும்) பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார். 1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார். பழனி கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார். திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார். திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார். ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார். காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார். ஈரோடு சிக்கைய்யா நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார். அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார். நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார். #kaikolar_history instagr.am/p/CrVRZ00p6ZB/

1 2 ••• 11 12 14 16 17