View allAll Photos Tagged sengunthar
தாத்தையங்கார் பேட்டை சேர்ந்த ஈவி ராமசாமி செங்குந்தர் அவர்களின் மகன் ஆவார். இவருடைய பெரியம்மா மகனும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். instagr.am/p/C92cxv4RraI/
செங்குந்த முதலியார் சமூகத்தின் தோற்றம் - முருகனின் பொற்படை தளபதிகள் வீரபாகு நவவீரர்கள்..
தொல்லியல் ஆதாரங்கள். #veerabagu #navaveerargal #kaikolar instagr.am/p/C9xX9upMrP3/
கோபிச்செட்டிப்பாளையம் திருப்பூர் முன்னாள் நாடாளுமன்ற(MP) உறுப்பினரும்,
செங்குந்தர் குல வெள்ளான்கோயில் பூர்வமாக கொண்ட
திரு.பொன்னப்பன் முதலியார்- திருமதி.குட்டியம்மாள் மகனுமான
*திரு.சண்முக சுந்தரம்.,B.A.,B.L.,exMP*
அவர்கள் இன்று (20.7.24) காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த
வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்😔😔😔
*செங்குந்தர் வரலாறு மீட்பு குழு* instagr.am/p/C9pAI4BJYAd/
*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை சில சமூக விரோதிகள் அபகரிக்க முயற்சி செய்தனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் கடந்த (15.07.24) திங்கள்கிழமை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தோம். பின்னர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். நேற்று (19.07.24) மேக்கூர் பாவடியைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டு கேட் (கதவு) அமைக்கப்பட்டு பாவடியை மீட்டு மேக்கூர் சமுதாய சொந்தங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மேக்கூரில் புதிய கிளை தொடங்கப்பட்டு நமது சமுதாயக் குலக்கொடியை மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர். இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.R.வைரம் அவர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு துணை அமைப்பாளர் திரு.ரமணிதரன் அவர்கள், ஊர் தலைவர்கள், மேக்கூர் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு செங்குந்தரின் ஒற்றுமையை வலுப்படுத்தினர்...* instagr.am/p/C9oeI5qx5qS/
*ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மேக்கூர் பகுதியில் நமது சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பாவடியை அபகரித்து ஜாதி, மத மோதலை தூண்டும் வகையில் சமூக விரோதிகள் பாவடியை ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் ஈரோடு செங்குந்த மகாஜன சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேவா ரத்னா Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர் அரும்பணிச் செம்மல் சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் தலைமையில் இன்று (15.07.24) திங்கள்கிழமை காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தோம். இதில் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி அளித்தார். பிறகு பிற்பகலில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சர் திரு.சு.முத்துச்சாமி அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தோம். பிறகு அமைச்சர் அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்தார். பெருந்துறை பேரூராட்சி தலைவர் திரு.ராஜேந்திரன் அவர்களையும் சந்தித்து பாவடியை சுற்றி மதில்சுவர் அமைத்து தரும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேக்கூர் காமாட்சியம்மன் கோவில் நிர்வாகிகள், ஈரோடு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பாவடி மீட்புக்குழு அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், மாவட்ட கிளைச் சங்க நிர்வாகிகள், கிளை உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் நம் சமுதாய மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்...* instagr.am/p/C9eBlEvoYtA/
உலகத்திலேயே 100 படங்களுக்கு மேல் முதன் முதலில் தயாரித்த
#செங்குந்தர் குலத்தோன்றல், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம் #முதலியார் அவர்கள் பிறந்த தினம் இன்று 🐅🔱🐓 instagr.am/p/C9b7JfOJu9q/
#இராணிப்பேட்டை மாவட்டம்
#கலவை நகர்
செங்குந்த முதலியார் மரபு கலவை ஒட்டச்சின்னான் வீடு, திமிரி பிச்சை வீடு, விளாப்பாக்கம் தையல் வீடு வகையறா பங்காளிகள்
அருள்மிகு பெரியாண்டவர் பூஜை திருவிழா
நாள்: 21.7.24 (ஞாயிறு) instagr.am/p/C9Z44WHJRUC/
பெரியூர் பச்சாபாளையம்
செங்குந்த முதலியார் சமூகம் 21கூட்டத்தாரின் 47 ஆம் ஆண்டு மஹா அபிஷேக ஆராதனை விழா அழைப்பிதழ் அனைவரும் வருக வாழ்க செங்குந்தர் வெல்க செங்குந்தர் வரலாறு மீட்பு குழு.
1.அரசுரான் கூட்டம்
2. அழகப்பன் கூட்டம்
3.ஆக்கவழி கூட்டம்
4. இலப்புளையான் கூட்டம்
5.உதிரமாலை கூட்டம்
6. கொங்க கூட்டம்
7. மாட்ராயன் கூட்டம்
8. மூப்பன் கூட்டம்
9.மொக்கையன் கூட்டம்
10. மால முதலி பட்டகாரன் கூட்டம்
11. தாண்டவ முதலி பட்டகாரன் கூட்டம்
12.பூசாரி கூட்டம்
13. எட்டிமரத்தான் கூட்டம்
14.நாராயணன் கூட்டம்
15. வெள்ளவழத்தன் கூட்டம்
16. தெற்கத்தியான் கூட்டம்
17.ஆட்டுகாரன் கூட்டம்
18. தலைகட்டுப்பான் கூட்டம்
19. ஊமைபட்டியான் கூட்டம்
20.உண்டிகாரர் கூட்டம்
21.தவித்தர முதலி கூட்டம். instagr.am/p/C9XW-5mpKw3/
திருநெல்வேலி செங்குந்தர் நடுத்தெருவில் கண்டுபிடிக்கப்பட்ட செங்குந்தர் போர்படை வீரர்கள் நவகண்ட சிற்பம்.
இதுபோல் உங்கள் ஊரிலும் சிற்பம் இருந்தால் அதன் போட்டோவை கமெண்டில் பதிவிடவும் instagr.am/p/C9ObChzIEkc/
செங்குந்தர் முதலியார் கொடியேற்றம் உற்சவம் - ஆனி திருமஞ்சனம் திருவிழா - சிதம்பரம் நடராஜர் கோவில். instagr.am/p/C815X2YpBu9/
ஆந்திரா மாநிலம் ஶ்ரீ சைலம் கோவிலில் உள்ள கைக்கோளர் சத்திரத்தில் நம் சமூக மக்கள் வைத்த கரிகால சோழனின் சிலை.
ஆந்திராவில் நம் சமூக மக்கள் பிறரால் கரிகால பக்தலு(அர்த்தம்: கரிகால சோழனின் பக்தர்கள்) கரிகால சோழன் கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆந்திரா பகுதியை கைப்பற்றிய போது நம் மக்கள் அங்கு படை வீரர்களாக சென்றனர் instagr.am/p/C8wIzP9J9m7/
திருவண்ணாமலையில் முதன் முதலில் School கட்டிய செங்குந்தர் குல பெருநிலக்கிழார், கொடைவள்ளல்
#திருவண்ணாமலை_சாமி_முதலியார்
ஐயாவின் நினைவுதினம் இன்று(ஜூன் 28)
ஐயாவின் குடும்பம் பற்றிய குறிப்புகள்
அக்காலத்தில் வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான்
நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம்.
அதுவும் 100 ஆண்டுகளுக்கு முன்பு
தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை
அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள்
அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள்
பணக்காரர் செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது
ஆனால் பணக்கார் பணம் படைத்த
சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க “விக்டோரியா இந்துபள்ளி என்ற பள்ளிக் கூடத்தைத் திறந்தார்
இன்றைக்கு 100 கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரியஇடத்தையும் இந்த பள்ளிக்கு “தர்ம “மாக கொடுத்தார்.
இரண்டு தலைமுறைக்கு முன்னதாக திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் விக்டோரியா இந்து பள்ளியில் படித்தவர்கள் தான்
தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்
1. #டி_எஸ்_முத்துக்குமாரசாமி_முதலியார்
2. டி.எஸ். நாரயணசாமி முதலியார்
3. டி.எஸ். ராமு முதலியார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 – 00 மணிக்கு
அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி
தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்
ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல்மண்டகப்படிஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும்
அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே
திருவூடலுக்கு போகும்
அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம்
அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளைதி.சாமிமுதலியாரின்முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்
1929 முதல் 1939 வரை. instagr.am/p/C8thJnjJxTD/
இதை போல் நம் சமுதாயம் சார்ந்த கல்வெட்டுகளில் நம் சமுதாயத்தின் முழு பெயரை போடவும்*செங்குந்த கைக்கோள முதலியார்* என்று instagr.am/p/C8LSu0-ojTA/
திண்டுக்கல் மாவட்டம் நீலமலைக்கோட்டை செங்குந்தர் முத்துக்குமாரசுவாமி கோவில் விழா instagr.am/p/C8GtmuspNPg/
முருகேச முதலியார் அவர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு இன்றைய நாளில் தான் முதல் முதல்
பழனி முருகன் தங்க தேர்.... ஓட
ஆரம்பம் ஆகிய நாள்..
10:06:1948..
இவர் தான் தேர் உபயம் அளித்தவர்.. instagr.am/p/C8BfvNEJqIt/
முருகப்பெருமானின் போர்ப்படை தளபதியான வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் மற்றும் அருணகிரிநாதர் செங்குந்தர். instagr.am/p/C7yD0cCp8p4/
திருவண்ணாமலை நகரின் முன்னாள் நகர் மன்றத் தலைவர்கள் செங்குந்தர் குல தேவராசு முதலியார் மற்றும் முத்துக்குமாரசாமி முதலியார் கல்வெட்டு.
திருவண்ணாமலை நகரின் நகர்மன்ற தலைவராக அதிகம் ஒரே வெற்றி பெற்றது செங்குந்தர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் instagr.am/p/C7ZNldYpEPP/
சுவாமி திருக்கல்யாண விழாவின் போது நம் அடையாளத்தை மறைத்து இப்படி செய்வது ஏன் ?
இடம் : திருச்செங்கோடு
இதை கொஞ்சம் எல்லாருக்கும் தெரியும்படி செய்ய வேண்டும். instagr.am/p/C7Q7flaJJtW/
ஒட்டக்கூத்தர் பூர்விகமான மணக்குடி ஊரில் தற்போது வரை ஒட்டக்கூத்தர் நேரடி வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர் அவர்கள் குடும்பத்தில் மூத்தவர்களுக்கு ஒட்டக்கூத்து என்று பெயர் வைத்து வருகின்றனர் இவர்கள் பற்றிய தகவல் இருந்தால் கமெண்ட் இல் பதிவிடவும் instagr.am/p/C7KZmdFO90g/
#திருவள்ளூர்_செங்குந்தர்_மகாஜன_சங்கம்
நடத்தும்
வென்று காட்டுவோம்
#கல்வி மற்றும் #வேலைவாய்ப்பு_வழிகாட்டுதல்கள் கருத்தரங்கம்
திருவள்ளூர் மற்றும் வேலூர் , ராணிப்பேட்டை, செங்கல்பட்டு போன்ற அருகில் உள்ள செங்குந்தர் சமூக மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
நாள் : 26.5.24 (ஞாயிறு)
இடம் : செங்குந்தர் திருமண மாளிகை,மேட்டுத்தெரு, திருத்தணி instagr.am/p/C7KJlmAoWsO/
நாளை 20.05.2024(திங்கள்)மதியம் 3 மணிக்கு *திருச்செங்கோடு எழுகரை நாட்டுச் செங்குந்தர் முதலியார்கள் மண்டபக்கட்டளை வெள்ளியானை, தங்க சப்பரம் உற்சவம் நடை பெறுகிறது*.... அனைவரும் வருக 🙏🙏🙏 instagr.am/p/C7J5G4cptFk/
#நாமக்கல் மாவட்டம்
#சோழசிராமணி
#செங்குந்தமுதலியார் பாத்தியப்பட்ட
பாவடி அருள்மிகு.விநாயகர் அருள்மிகு.முத்துக்குமாரசுவாமி,அருள்மிகு இடும்பன்சுவாமி அருள்மிகு.கருப்பண்ணசுவாமி திருக்கோயில்
#மகா_கும்பாபிஷேக விழா instagr.am/p/C6-t6-jJCs3/
இராசிபுரம் சிவன் கோவில் - செங்குந்த முதலியர்வமண்டகபடி கல்வெட்டு
1710ஆம் ஆண்டு கல்வெட்டு.
திருச்செங்கோடு ஏழுகரைநாடுகளில் 5 வது நாடு இராசிபுர நாட்டுக்கு கீழ் உள்ள கிராமங்களில் பெயர்களை உடைய கல்வெட்டு. இவர்கள் இராசிபுரத்தில் உள்ள கைலாசநாதர் திருக்கோவிலுக்கு கட்டளை செய்ய பாத்தியப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு இராசிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ளது. instagr.am/p/C68Jn8cJ8Ox/
செங்குந்தர் குல நவகண்ட வீரன் வீரபாகுவின் அவதாரம் முத்துகுமார் சாமி திருவிழா. நாமக்கல் மாவட்டம். instagr.am/p/C63BQlUJVqS/
*நாளை (28.04.24) ஞாயிற்றுக்கிழமை தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் முன்னாள் மாநில தலைவரும் 20-ஆம் நூற்றாண்டின் நெசவாளர்களின் காவலராக திகழ்ந்த ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த பத்மஶ்ரீ எம்.பி.நாச்சிமுத்து முதலியார் அவர்களின் 112-ஆம் ஆண்டு பிறந்தநாளை சென்னிமலை சென்டெக்ஸில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட உள்ளது. அதுசமயம் அனைத்து கிளைச் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், இளைஞரணியினர், மகளிரணியினர் மற்றும் அனைத்து செங்குந்த சொந்தங்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்...*
*நாள் : 28.04.2024 (ஞாயிற்றுக்கிழமை)*
*இடம் : சென்டெக்ஸ் அலுவலகம், சென்னிமலை.*
*நேரம் : காலை 10:00 மணி.*
*இப்படிக்கு*
*மாவட்டத் தலைவர்*
*மாவட்டச் செயலாளர்*
*மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்*
*(ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம்)* instagr.am/p/C6QisSwp88o/
தற்போது செங்குந்த முதலியார் சமூகத்துக்கு இருந்த ஒரே ஆதினம் சிதம்பரம் மௌன தேசிகர் ஆதின சன்னிதானம். instagr.am/p/C6Fh6Qho3iN/
கடலூர் மாவட்டம்
#சிதம்பரம் உள்ள 4 நூற்றாண்டு பழமையான
#மௌன தேசிகர் ஆதீனம் செங்குந்தர் குல
ஸ்ரீ ல ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் இன்று ( 22/4/24) சித்தி அடைந்தார்கள். instagr.am/p/C6EsMf9BWc2/
*நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் நம் செங்குந்த சமுதாயத்தைச் சார்ந்த வெற்றி வேட்பாளர் திரு.T.V.R.அமிர்தலிங்கம் அவர்கள் கரும்பு விவசாயி சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மற்ற பிரதான கட்சிகள் நம் செங்குந்தர் சமுதாயத்தை புறகணித்துள்ளனர். ஆதலால் (ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, குமாரபாளையம், மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம்) நம்மால் முடிந்தவரை நம் செங்குந்த சொந்தங்களின் வாக்குகளை செங்குந்தருக்கே அளிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். மற்ற கட்சியினரை புறக்கணித்து செங்குந்த முதலியாரின் ஒற்றுமையை காட்டுவோம். நாட்கள் குரைவாக உள்ளதால் நம் செங்குந்த சொந்தங்கள் அனைவரும் வாட்ஸ்அப் குரூப் மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் நம் உற்றார் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி வாக்களிக்க செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க 14வது பட்டனை அழுத்தவும்...*
*செங்குந்தர்களின் வாக்கு! செங்குந்தர்களுக்கே!* instagr.am/p/C5vxgcioXBO/
இலங்கை நாடு ஆரையம்பதி செங்குந்த முதலியார் திருநீலகண்ட விநாயகர் கோவில் குடமுழுக்கு விழா instagr.am/p/C5jKQ_ttrQG/
சேலம் அம்மாபேட்டை செங்குந்த முதலியார் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் தங்க தேர். instagr.am/p/C5i5thVxdRv/
ஜப்பானிய மன்னர்கள் முன்னேற்றத்திற்கு சாமுராய் வீரர்கள் இருந்ததுபோல். சோழர் சாம்ராஜ்ஜியம் செழிப்பாக இருக்க உருதுர்னையாக இருந்தவர்கள் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகம்.
இன்று தமிழகத்தில் அரசியலில் அனாதையாக உள்ளது. instagr.am/p/C5gD4gBvPml/
1991 சிதம்பரம் செங்குந்த முதலியார் மண்டபம்.
கிருபானந்த வாரியார் திறந்து வைத்தது. instagr.am/p/C5feOijp4Sx/
*#மதுரை_கள்ளழகர்_திருவிழா*
முன்னிட்டு
*#செங்குந்த_முதலியார்* சமூகம் சார்பாக
*#சீர்பாதம்_தூக்கும் (சுவாமி சுமக்கும்) மண்டகப்படி*
பல வருடங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.
கள்ளழகர் நம் மண்டகப்படி வந்த பின்னர் பாரம்பரிய அன்னதானம் நிகழ்வு நடைபெற்று வருகிறது. *#அன்னதானம்*
நிதியுதவி வழங்க உள்ள செங்குந்தர் உறவுகளை
அன்புடன் வரவேற்கிறோம்.
தலைமை: ரா.தட்சிணா மூர்த்தி.
Mobile no:9597399562.
Bank name:ICICI bank ltd
A/C No:270401510693
IFSC code:ICIC0002704
Name:Naveenkumar.D
Phonepe:9789481962 instagr.am/p/C5dLtq4JQiT/
நமது சமுதாய சின்னம் உங்க வீட்டில் வைக்க வேண்டும் என்றால் போட்டோவில் உள்ள நிறுவனத்தை சொதர்புகொள்ளவும். instagr.am/p/C5Lq5AJPp2y/
பழனி கோவிலுக்கு, செங்குந்தர் குல குழந்தைவேல் முதலியார் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பாக வழங்கப்பட்ட பேட்டரி பேருந்து.
40 லட்சம் மதிப்பில் இரண்டு பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. instagr.am/p/C5Ky9OYJSnR/
திருத்தணி வட்டம் அம்மையார்குப்பம் செங்குந்த முதலியார்.
இதுபோல் உங்கள் ஊரில் செய்ய முடியுமா?? instagr.am/p/C46IxuxPuQt/
செங்குந்த கைக்கோள முதலியார் சமூக உத்தம சோழர் கால கல்வெட்டு(978 A.D)
எப்படி கோவில்களில் மரபு வழி அர்ச்சகர்கள் சிவப்ராம்மணரும் வைணவ பட்டர்மாரும் உள்ளனரோ கைக்கோளர்கள் மெய்க்காவல் மற்றும் சீர்பாதம் தாங்குவதையும் மரபு வழி உரிமையாக கொண்டிருந்தனர் , ஆகையால் கோவில் நிலங்களில் பொற்கோயில் கைக்கோளருக்கு காணி உண்டு , மன்னருக்கு காவல் மட்டுமின்றி இறைவனுக்கும் காவலாக நின்றவன் கைக்கோளன். instagr.am/p/C4qc_jIIeyc/
இதுபோல் உங்க ஊரில் நம் சமுதாய சின்னத்தை வையுங்கள்.
நம் அடையாளத்தை நாம் தான் காக்க வேண்டும்... instagr.am/p/C31ytWbpFzQ/
ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டத்தின் ஒப்பற்ற இந்திய விடுதலை போராட்ட வீரர்,
தூய தமிழக்காவலர்
வேலூர் மாவட்டம்
*#குடியாத்தம்*
*#கு.மு.அண்ணல்தங்கோ_செங்குந்தர்*
திருவுருவ வெண்கலச் சிலையை திறக்க இருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு
*#செங்குந்த_முதலியார்* சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்💐💐💐💐 instagr.am/p/C31pdyZJ4XK/
ஆந்திர மாநிலம் இராமகிரி அங்காளம்மன் கோவில்.
நம் செங்குந்த முதலியார் சமூகத்தின் காவக்காரன், குதிரைவீரன், போயம் கூட்டம் பங்காளிகள் குலதெய்வம்...
#ramagiri instagr.am/p/C3axG8SsYdt/