View allAll Photos Tagged sengunthar
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெரு விழாவில் சோழ செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட #சூரசம்ஹாரம் பெருவிழா அழைப்பிதழ் instagr.am/p/DB1NdDgJZB0/
திருதணியை ஆந்திராவில் இருந்து மீட்டு எடுத்த செங்குந்தர் கைக்கோள முதலியார் குலத்தோன்றல்
மக்கள் சேவகர், சுதந்திர போராட்ட வீரர், தமிழக வடக்கு எல்லை போராட்டத்தை தீவிரப்படுத்தி திருத்தணி பள்ளிப்பட்டு தொகுதிகளை ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு மாற்ற காரணமானவர், திருத்தணி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஏகிரி சஞ்சீவி தியாகராஜ முதலியார் instagr.am/p/DB0uyJLJtLF/
#திருவண்ணாமலை நகரத் தந்தை T.S.முத்துக்குமார்சாமி #முதலியார்
#Tiruvannamalai #kaikolar instagr.am/p/DBv-qYnpfbl/
ஜம்புலிங்கம் முதலியார் 54வது நினைவாஞ்சலி
இன்று 28.10.24 விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாக மரக்காணம் கிளைச் சங்கத்தில் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில்
தென்னிந்தியாவிற்கு மின்சாரம் அளிக்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்க (NLC) உருவாக்க 640 ஏக்கர் தனது சொந்த நிலத்தை தானமாக வழங்கிய
*#நெய்வேலி_நிலக்கரி_சுரங்க_தந்தை*
தெய்வத்திரு
*T.M. #ஜம்புலிங்க_முதலியார்*
முன்னாள் கடலூர் சேர்மேன்
அவர்களின் 54 ஆம் ஆண்டு நினைவஞ்சலியை நம்முடைய விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பாகவும் இன்று மரக்காணத்தில் மிகச் சிறப்பாக அவருடைய திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நம்முடைய பிதாமகனுக்கு நினைவாஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினோம். இந்த நிகழ்ச்சியிலே மரக்காணம் சங்கத்தினுடைய முதன்மை வாய்ந்த நிர்வாகிகளும் செஞ்சிக் கோட்டை செங்குந்தர் சங்கத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏
*GS. முருகன் முதலியார், மாவட்ட தலைவர்*
*விழுப்புரம் மாவட்டம் செங்குந்தர் மகாஜன சங்கம் செஞ்சி* instagr.am/p/DBswlwbpQCL/
பழனி செங்குந்த முதலியார் - சூரசம்ஹார மண்டகப்படி.
திண்டுக்கல் மாவட்டம்
#பழனி
அருள்மிகு #தண்டாயுதபாணி_சுவாமி திருக்கோவில் நடைபெறும்
கந்தசஷ்டி
#சூரசம்ஹாரம் பெருவிழாவின் செங்குந்தர் மண்டகப்படி அழைப்பிதழ்
முருகப்பெருமானின் போர்படை தளபதிகளான
#வீரபாகு_செங்குந்தர் உள்ளிட்ட நவ வீரர்கள் புகைப்படம் அழைப்பிதழ் பயன்படுத்தியுள்ள
#செங்குந்தர்_தர்ம_பரிபாலன_சபை நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்🙏🙏
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DBqJRSQJZxU/
அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய என் குல சொந்தங்களே
செங்குந்தர் கைக்கோளர் வம்சா வழியைச் சேர்ந்தவர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய செல்வம் கேட்டரிங்
தம்பி அண்ணன் ஹோட்டல் உரிமையாளர் அவர் இப்பொழுது நமது ஈரோடு கோட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் ஸ்வீட் காரம் விற்பனையை துவங்கி உள்ளார் நாம் அவர்கள் அனைவரும் விற்பனையை அதிகப்படுத்தி ஆதரவு தாரீர் நம் ஒற்றுமையை பறை சாற்றிடுவீர் தங்கள் குடும்பத்துடன் இனிய தீபாவளி திருநாளை மகிழ்ச்சியாய் கொண்டாடுவோம் வாரீர் வாரீர் எம் குல சொந்தங்களே ஆதரவு தாரீர் தாரீர்
இப்படிக்கு
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு மாவட்ட செயலாளர் சோழா மு ஆசைத்தம்பி 🙏🙏🙏🙏🙏 instagr.am/p/DBnThfwp2UZ/
T.M. ஜம்புலிங்கம் முதலியார்
இன்று தென் இந்தியாவுக்கு மின்சாரம் கிடைக்குது என்றால் இவர் தான் காரணம்.
இவரின் நினைவு தினம் october 28.
இவர் மீது மரியாதை உள்ளவர்களும், செங்குந்தர் சமுதாயத்தை ஒற்றுமை படுத நினைப்பவர்களும், இவர் நினைவு தினத்தன்று இவரின் போட்டோவுக்கு மாலை போட்டு உங்கள் ஊர் செங்குந்தர் சமுதாயத்தை கூட்டி மரியாதை செய்யவும்...
நெய்வேலியில் நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்து, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கம் உருவாக காரணமாக இருந்து, நிறுவனம் உருவாக்க 620 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்தவர்தான் இந்த ஜம்புலிங்கம் முதலியார்.
1. கடலூர் மாவட்டத்தில் தாலுகா போர்டு மெம்பர் ஆக இருந்துள்ளார் ஒன்பது ஆண்டுகள்
2. கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும்
3. ஜில்லா போர்டு மெம்பர் ஆக மூன்று ஆண்டுகளும்
4. ஜில்லா போர்டு தலைவராக மூன்று ஆண்டுகளும் பதவி வகித்தார்
5. கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக மூன்று ஆண்டுகளும்
நகர மன்ற தலைவராக மூன்று ஆண்டுகளும்
6. நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார் இவை அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணிகள்
7. இவரின் நேர்மையான மக்கள் பணியை பாராட்டும் வகையில் ஆங்கிலேய அரசு ராவ் பகதூர்(Rao Bagadhur) பட்டம் கொடுத்தது.
குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மதுரை பிரமலைக் கள்ளர், வேம்பூர் பறையர் மக்களை தென்னார்க்காடு மாவட்டத்தில் அசிஸ் நகர் செட்டிலெமென்ட் என்று உருவாக்கி ஆங்கிலேய அரசு இந்த மக்களை கொடுமைப்படுத்தியது. குற்றப்பரம்பரைச் சட்டத்தில் கைதாகி அசிஸ் நகர் செட்டிலெமென்ட்யில் அடைக்கப்பட்டு இருந்த மக்களுக்கு அடிப்படை வசதி, உணவு கூட இல்லாமல் இருந்த நிலையில் ஜம்புலிங்கம் முதலியார் அங்கு சென்று அவர்களுக்குத் தேவையான அடிப்படை உணவு மற்றும் வசதிகளை செய்து தந்தார்.
தென் ஆற்காடு மாவட்ட படையாட்சி வன்னியர் சமூகத்தின் மீதி போடப்பட்ட குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி இந்த சட்டத்தை திரும்பப் பெற வைத்தார் ஜம்புலிங்க முதலியார் instagr.am/p/DBnR8W8pqP4/
தெலுங்கு கம்மவார் தெரு அப்படியே உள்ளது...
யாதவர் தெரு பெயர் அப்படியா உள்ளது...
செங்குந்தர் பெரிய தெரு என்ற பெயரில் மட்டும் செங்குந்தர் பெயர் ஏன் நீக்கப்படுகிறது???? instagr.am/p/DBlXqzQphrK/
தியாகி சண்முக முதலியார் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலையூரில் செங்குந்தர் குலத்தில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்.
1942இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சண்முக முதலியார் அச்சமின்றிப் பங்கேற்றார். ஆங்கிலேயருக்கு எதிரான வெகுஜன இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகஸ்ட் 21, 1942 அன்று வெயிலுகந்த முதலியார் தலைமையில், சுண்முக முதலியாரின் தீவிர ஈடுபாட்டுடன் தேசியக் கொடியை ஏற்ற முயன்றனர். கடலையூர் உடைமாற தெருவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு கொடியேற்றினர். பதிலுக்கு, காவல்துறை வன்முறையில் பதிலடி கொடுத்தது, சண்முக முதலியார் மற்றும் பலர் பதிலடி கொடுத்தனர், இதன் விளைவாக பரவலான அமைதியின்மை ஏற்பட்டது.
மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் வயது மற்றும் பாலினம் பொருட்படுத்தாமல் கடலையூர் கிராம மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட ஒரு போலீஸ் பட்டாலியனை அனுப்ப வழிவகுத்தது. போராட்டத்தின் போது சண்முக முதலியார் தடுத்து வைக்கப்பட்டு உணவு வழங்காமல் சித்திரவதை செய்யப்பட்டார். காவல்துறையைத் தாக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147ன் கீழ் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, திருச்சி மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்ட அவர், அங்கு கடுமையான அடக்குமுறைகளை அனுபவித்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, சண்முக சமூகப் பணிகளில் ஈடுபட்டார், சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1972 இல் இந்திய அரசாங்கத்தால் அவருக்கு செப்புத் தகடு வழங்கப்பட்டது. instagr.am/p/DBY2fceAVdt/
நம் சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நம் சமுதாய கல்யாண பத்திரிக்கை, கோவில் பத்திரிகை/ கல்வெட்டுகளிலாவது பெரியாருக்கு பின்னாடி முதலியார் பட்டத்தை போடவும்.
#mudaliar #kaikolar instagr.am/p/DBVlBy_xlOn/
நாமக்கல் மாவட்டம்
#திருச்செங்கோடு
#சூரியம்பாளையம்
#செங்குந்த_முதலியார்
பாவடி பஞ்சாயத்து
அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் சுவாமி,
அருள்மிகு முத்துக்குமாரசாமி சுவாமி கோவில் திருவிழா - 2024 instagr.am/p/DBVXu3FIGao/
1934 யில் T.M. ஜம்புலிங்கம் முதலியார்(நெய்வேலி நிலக்கரி சுரகம் தந்தை) முயற்சியால் கட்டப்பட்டு, இவர் தலைமையில் திறக்கப்பட்ட புவனகிரி வெள்ளாறு பாலம்.
#cuddalore #bhuvanagiri instagr.am/p/DBQ1YiQpwFN/
நாமக்கல் மாவட்டம் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில், செங்குந்த முதலியார் பொங்கல் திருவிழா..
#namakkal #athanoor instagr.am/p/DBQCyQkIVM5/
செங்குந்தர் கோவில்களில் இந்த வருடம் நடைபெற உள்ள #சூரசம்காரம் விழா பத்திரிகையில் வீரபாகு செங்குந்தர் உள்ளிட்ட நவீரர்கள் படத்தையும், குல கொடி புலி, வேல், சேவல் சின்னத்தையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளுங்கள். நம் செங்குந்த கைக்கோள முதலியார் சமுதாயம் இந்த வீரபாகு நவாவீரர்களின் வம்சத்தில் பிறந்தவர்கள் இதனால் தான் மரபுவழி பின்பற்றி அனைத்து ஊர்களிலும், அறுபடை வீடு உட்பட நம் சமுதாயத்துக்கு சூரசம்ஹாரம் செய்யும் உரிமை உள்ளது....
தமிழ் கடவுள் முருகனுக்கு நேரடி தொடர்பு உடைய சமூகம் நம் செங்குந்த கைக்கோள முதலியார்.. instagr.am/p/DBF8kkJpL6k/
திருவண்ணாமலை நகர தந்தை.
1929 முதல் 1939 திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக இருந்து திருவண்ணாமலைக்கு முதன் முதலில் பள்ளிக்கூடம் கட்டி, மின்சார வசதி கொடுத்து, குடிநீர் வசதி கொடுத்து, திருவண்ணாமலை கிரிவலப் பாதை ரோடு, திருவண்ணாமலை கோவில் அறங்காவலராக இருந்து பல திருப்பணிகளை செய்த #செங்குந்தர் குல #T_S_முத்துக்குமாரசாமி_முதலியார்.
#Tiruvannamalai #திருவண்ணாமலை instagr.am/p/DBEkXKOJEV2/
1967 இல் சேலம் பெருந்தலைவர் காமராஜர் வந்த போது திருச்செங்கோடு நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் கட்சி பொறுப்பாளர்கள் உடன் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்
இடதுபுறம் MPR மானிக்க முதலியார் கடைசி மகன் R.M அர்த்தநாரி சாமி முதலியார் அவர்கள் மூன்றாவது நிற்பவர் செங்குந்தர் குல வீரவேல் கோத்திரம் சின்ன மாரிமுத்து அவர்கள் வலதுகை பக்கம் நிற்பவர். மின்னகல்காரர் PA பழனியப்பா முதலியார் மகன் பச்சியப்பன் ஆவார். மற்ற நபர்களுடன். 🙏🙏🙏🙏 instagr.am/p/DAyPn7RBV3P/
ஒரு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான உதாரணம்...
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த சுதந்திரப் போராட்ட தியாகி கொடிகாத்த குமரனின் பிறந்த நாளான 04/10/2024 வெள்ளிக்கிழமை அன்று தியாகி கொடிகாத்த குமரனின் தியாகத்தை போற்றும் விதமாக ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் ஈரோடு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. #erode instagr.am/p/DAp0YomJWoR/
#COMMON_DP FOR KUMARAN BIRDAY_❤️🙏🔥
நாளை October 04 #கொடிகாத்த #திருப்பூர்_குமரன்_முதலியார் அய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த போட்டோவை அனைவரும் உங்கள் Facebook, What's app, Instagram கணக்குகளின் DP, Story, Status களில் வைக்கவும். instagr.am/p/DApqfbYJf7m/
October 2 நினைவு நாள்
கல்விக்கண் திறந்த கர்மவீரர்
கு.காமராஜர்
-நினைவை போற்றுகிறோம்...
காலம் போற்றும் பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரை முதல்வராக வர பாடுபட்ட செங்குந்த முதலியார்
சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தளபதிகள்
திருப்பத்தூர் க.அ.சண்முக முதலியார் ex MLA
குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் MLA
1. 1954 ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக வர வேண்டும் என்றால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தலைவர் காமராஜருக்காக தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வெற்றிக்கு களப்பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் ஆவார்.
2.செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகம் வாழும் தொகுதியான வேலூர் குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து எம்எல்ஏ -வாக வெற்றி பெற வைத்தவர் குடியாத்தம் திருமகள் நூற்பாலை மேலாண்மை இயக்குனர். திருப்பத்தூர் பெரியவர் கா.அ.சண்முகம் முதலியார் ஆவார்.
3.திருப்பத்தூர் வரும் போது முதல்வர் காமராசர் பெரியவர் வீட்டில் விருந்து சாப்பிட்டும், தங்கியும் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/DAnTIJmIF_O/
நாமக்கல் மாட்வட்டம் குமாரபாளையம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தனசேகரன் செங்குந்தர் இறைவனடி சேர்ந்தார். instagr.am/p/DAcwWg6pXnZ/
கோவை மாவட்டம்
செங்குந்த முதலியார் சமூகம் சார்ந்த
பத்மஸ்ரீ #பாப்பம்மாள் அம்மையார் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/DAbT7vyJE40/
உறவுகள் அனைவரும் ஆதரவு அளிக்கவும்...
தாங்கள் பகுதியில் நடக்கும் கோவில் திருவிழா, விளையாட்டு விழா, சமுதாயம் சார்ந்த விழாக்களில்
நமது சின்னம் பொறித்த ஆடை உடுத்தி நம் வரலாற்றை மீட்டு எடுப்போம் 🙏
மேலும் விவரங்களுக்கு...
6383221383 instagr.am/p/DATc-LkBZKL/
ஈரோடு மாவட்ட கவுந்தப்பாடி நகர தந்தை குப்புசாமி முதலியார். இன்றைக்கு பலநூறு கோடுகள் மதிப்புள்ள சொத்துக்களை தானம்னேய்தவர். இரண்டு முறை பவானி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர். instagr.am/p/DASVa2UJD3C/
2016 குடியாத்தம் செங்குந்தர் நாட்டாமை மகுடம் சூட்டும் விழா...
இதுபோன்ற செங்குந்தர் நாட்டாமை விழா உங்க ஊரில் நடைபெற்று இருக்கிறதா? instagr.am/p/DANG2MTIU6R/
செங்குந்த முதலியார் சமூகம் ஐம்பெரும் விழா. நம் சமுதாய ஒற்றுமையை காட்ட அனைவரும் கலந்துகொள்ளவும்.
செங்குந்தர் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றம்.
கைக்கோளர் படை சிலம்பாட்டம் நிகழ்ச்சி
இடம்: ஈரோடு செங்குந்தர் கல்லூரி
நாள்: 29- செப்டம்பர் (Sunday) instagr.am/p/DAK8bX_oVOT/
செங்குந்தர் கைக்கோள முதலியார் சொந்தங்களே வணக்கம்
நாளை *(15-09-24, ஞாயிறு)* நம் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுதாயத்தில் பிறந்த *மாமேதை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்*
*பேரறிஞர் பெருந்தகை அண்ணா* அவர்களின்
*116 -வது பிறந்தநாள் விழா*.
அனைவரும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
*இடம்: புளியமரம் பஸ் ஸ்டாப், வெங்கமேடு*
*நேரம்: காலை 7.30 மணி*
இங்ஙனம்:
*CPM (எ) C.பாஸ்கர் முதலியார்*
*மாவட்ட தலைவர்*
*தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம்*
*செங்குந்தர் இளைஞர் பேரவை*
*கரூர்* instagr.am/p/C_5bTtdJkwz/
இந்த வருடம் கொடிகாத்த திருப்பூர் குமரன் முதலியார் பிறந்தநாள் விழாவை பெரிய அளவில் கொண்டாட திட்டமிட்டுள்ளோம். இது சம்பந்தமான கூட்டத்தில் அனைவரும் பங்கு கொள்ளவும் instagr.am/p/C_15zNDIiiy/
நம்ம மக்களின் பாவடி பிரச்சனைக்காக போராடிவரும் ஈரோடு மாவட்ட செங்குந்த முதலியார் சங்கம் ஐம்பெரும் விழாவுக்கு, தமிழகத்தில் உள்ள அனைத்து செங்குந்த முதலியார்களையும் அலைகிறோம்.
அவைவரும் வந்து கலந்து கொண்டு நமது பாவடி பிரச்சனை, நெசவாளர் பிரச்சனை, திருப்பூர் குமரன் மணிமண்டபம் கட்ட போராட்டம், ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் சிலை அமைக்க குழு. ஆகியவற்றை கலந்து பேசுவோம். வாவீர் அனைவரும்...
இடம்: ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி.
நான்: 29.09.2024(ஞாயிறு கிழமை) instagr.am/p/C_sDJH5pwkL/
💪💪🔥🔥செங்குந்தர் கைக்கோள முதலியார் மரபினர் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதாக சொல்லப்படும் செய்யுள்.......
சோழர் ஆட்சிக் காலத்தில் இராசாதிராசன் என்ற பெயருடன் இரண்டு சோழ மன்னர்கள் இருந்தனர்..
1..இராசாதிராசன் (1018–1054)
(இராசராச சோழனின் பேரனும் இராசேந்திர சோழனின் மகனும் ஆவார்)
2..இரண்டாம்இராசாதிராசன் (1166–1178)
(விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார்)
இந்த செய்யுள் ஒட்டக்கூத்தரால் பாடப்பட்ட ஈட்டி எழுபது எனும் தொகுப்பில் உள்ளது
வரலாற்றை ஆராய்ந்து பார்க்கையில்
ஒட்டக்கூத்தர் இரண்டாம்இராசாதிராசன் (1166–1178) இன் காலப்பகுதிக்கு முன்னர் வாழ்ந்த புலவர்....
ஆகவே ஒட்டக்கூத்தர் இதில் குறிப்பிட்டது இராசாதிராசனையே (1018–1054)
(முதலாம் இராசாதிராசனையே)
அவரிற்கு இடையூறாக இருந்த யாழ்ப்பாண மன்னனை...... திருச்செந்தூரை ஆண்ட செங்குந்த மன்னன் சுமன் முதலியார் என்பவர் தனது செங்குந்தர் படையுடன் தலைமையேற்று சென்று ஒரே நாளில் வென்றதாக இந்த செய்யுளில் கூறப்படுகின்றது.....
யாழ்ப்பாணத்தில் செங்குந்தர் ஆட்சி மற்றும் குடியேற்றங்கள் இந்தப் படையெடுப்பினால் தோன்றியிருக்கலாம்...
#யாழ்ப்பாணம்
#கல்வியங்காடு
#கரவெட்டி
#ஈழம்
#இலங்கை
#செங்குந்தர் #கைக்கோளர் #முதலியார்
#செங்குந்தர்_கைக்கோள_முதலியார் சமூகம்
#நவவீரர் #நவவீரர்கள் வம்சம்
#வீரபாகு வம்சம்
#கந்தப்பரம்பரை
#சேவற்கொடி வைத்து #புலிக்கொடி காத்த இனம்.
மரபுவழி கோவில்களில்
#சூரசம்ஹாரம் செய்ய உரிமை உள்ள இனம் #முருகனின்_படைத்தளபதிகள்
#சோழர் #படை
#தெரிந்த_கைக்கோளர்_படை
#சோழர்கள் instagr.am/p/C_gHjoisv8E/
கொங்கு மண்டல செங்குந்தர்களின் கொடை வள்ளல் RAN முத்துசாமி முதலியார்
நெசவாளர் சமுதாய முன்னேற்றத்துக்காக பல கல்லூரிகளை உருவாக்கியவர்...
*இன்று (03.09.24) ஈரோடு மாவட்ட செங்குந்த மகாஜன சங்கத்தின் முதல் தலைவர் ம R.A.N.முத்துச்சாமி முதலியார் அவர்களின் 111வது பிறந்தநாளான இன்று மாவட்டத் தலைவர் 'சேவா ரத்னா' Dr.N.நந்தகோபால் B.Com., அவர்கள் மாவட்டச் செயலாளர் 'அரும்பணிச் செம்மல்' சோழா M.ஆசைத்தம்பி அவர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் Dr.RANM கல்லூரி முதல்வர் Dr.பழனியப்பன் அவர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திரு.வைரம் அவர்கள், திரு.முருகானந்தபதி அவர்கள் மற்றும் திரு.சீனிவாசன் அவர்கள் உடனிருந்தனர்...* instagr.am/p/C_ds_zFt6Ve/
ஈரோடு மாவட்டம் செங்குந்தர் குலம் செரிய முதலி கோத்திரம் பங்காளிகள் கோவில் விழா. #erode instagr.am/p/C_XODLcMBJQ/
#ஈரோடு_மாவட்ட_செங்குந்த_மகாஜன_சங்கம்
நடத்தும்
#ஐம்பெரும்_விழா அழைப்பிதழ்
ஈரோடு மன்னர் சந்திரமதி முதலியார் படம் திறப்பு விழா
நாள் : 29.09.2024 (ஞாயிறு)
இடம் : கயிலைமணி முனுசாமி முதலியார் அரங்கம்,
ஈரோடு
செங்குந்தர் பொறியியல் கல்லூரி, துடுப்பதி instagr.am/p/C_P_yJdJ7os/
செங்குந்த மகாஜன சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நமது செங்குலத்தின் 64 நான்காவது நாயன்மார் ஆக விளங்ககுடிய திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 118வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக நடைபெற்றது சின்னசேலத்தில் உள்ள நமது செங்குந்தர் திருமண மண்டப்பத்தில் காலை சுமார் 9.15மணி அளவில் கொண்டாடப்பட்டது இதில் அன்புக்குரிய அண்ணன் ASMP பரமசிவன் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் T.அங்கமுத்து அவர்கள் மாவட்ட பொருளாளர் Lion A.R.ஏழுமலை அவர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் K.பாலகிருஷ்ன் V. முருகன் அவர்கள் மாதவச்சேரி கிளை சங்கம் நிர்வாகி K.மாகலிங்கம் அவர்கள் அரியபெருமானூர் கிளை சங்கம் நிர்வாகி D.மூர்த்தி அவர்கள் மேலும் நமது செங்குந்த மகாஜன சங்கம் கிளைசங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியில் சிறப்பித்தனர் வாழ்க வாழ்க செங்குந்தம் வளர்க வளர்க செங்குந்தம் ஒற்றுமை ஒன்று படுவோம் உயர்வு அடைவோம் 💐🙏💐 instagr.am/p/C_GV7gCtvw-/
சென்னை சில்க்ஸ் குழுமம் நிறுவனர் அய்யா குழந்தைவேல் முதலியார் அவர்களின் நினைவு தினம் instagr.am/p/C-_0LSoJuo3/
கரூர் *செங்குந்தர் கைக்கோள முதலியார் மண்டபம் திறப்பு விழா* அன்று மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியாக *ஐம்பெரும் விழா* நடைபெற உள்ளது.
*நாள்: 26-08-24, திங்கட்கிழமை*
*நேரம்: காலை 9.00 மணி*
*இடம்: அண்ணா-MGR சிலை 50 அடி சாலை ரோடு, வெங்கமேடு, கரூர்*.
அனைவரும் வருகை தந்து ஆதரவு நல்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி
இங்ஙனம்
*மண்டபம் பங்குதாரர்கள்*
சோழ பேரரசின் ராஜகுரு, மூன்று சோழ மன்னர்களின் அமைச்சர்
செங்குந்தர் சமூக குலகுரு
கவிச்சக்கரவர்த்தி
#ஒட்டக்கூத்தர்_செங்குந்தர்
அவர்களின்
*834 வது குருபூஜை*
விழா இன்று செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து
தூத்துக்குடி மாவட்டம்
#முக்காணி
#செங்குந்த _முதலியார்
சமுதாய மக்கள் சார்பாக கொண்டாடப்பட்டதற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-0LDbCujEq/
#நாமக்கல் மாவட்டம் #குருசாமிபாளையம்
செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற
சோழ பேரரசின் ராஜகுரு,அரசவை அமைச்சர்
12 ம் நூற்றாண்டின்
கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்
#செங்குந்தர் சமூக குலகுரு #ஒட்டக்கூத்தர்_முதலியார் அவர்களின் பிறந்தநாளான இன்று (18/08/24) குருபூஜை விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட செங்குந்தர் மகாசன சங்க தலைவர்
திரு.மதிவாணன் அவர்கள் சுப்பிரமணியர் ஆலயத்தின் அருகில் உள்ள செங்குந்தர் சமுதாயக் கொடி கம்பத்தில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். செங்குந்தர் சமுதாய ஊர் பெரியதனக்காரர் திரு டி கே.ஏ தியாகராஜன் அவர்கள் செங்குந்தர் சமூக குலகுரு ஒட்டக்கூத்தர்செங்குந்தர் படத்திற்கு மாலை அணிவித்து குருபூஜை நடத்தினார் . விழாவில் பாரதி வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் திரு குணசேகரன். மருந்தாளுனர் திரு. பவானி.கோபால். பேராசிரியர். முனைவர். நாகராஜன், ஆசிரியர் கண்ணன், தமிழரசன் ஆகியோர் கவிச்சக்ரவர்த்தி
ஒட்டக்கூத்தரின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தனர்.
இனி வரும் காலங்களில் கவிசக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்களின் படைப்புகளின் மேலான பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன், செயற்குழு உறுப்பினர் திரு R. ஜோதிகிருஷ்ணன். துணைத் தலைவர் திரு பாலப்பாளையம்.சுந்தரம், தோனமேடு இணைச் செயலாளர் திருஈஸ்வரன், சீராப் பள்ளி இணைச் செயலாளர் திரு தங்கவேலு, பாலப்பாளையம் பெரியதனக்காரர் திரு கணேசன், மற்றும் சமுதாய ஊர் காரியக்காரர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் , காரியக்காரர் குட்டி துரைசாமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த திரு பவானி கோபால் அவர்களுக்கும் திரு குட்டி துரைசாமி அவர்களுக்கும் நன்றி. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
தெரிவித்துக் கொள்கிறோம்
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு 🙏🙏🙏 instagr.am/p/C-0GpuOtwch/
சோழ பேரரசின் ராஜகுரு, மூன்று சோழ அரசர்களின் அமைச்சர்,
#செங்குந்தர் சமூக குலகுரு,
12 ம் நூற்றாண்டின் #கவிச்சக்கரவர்த்தி
#ஒட்டக்கூத்தர்_முதலியார்
குரு பூஜை instagr.am/p/C-z1LpuNYmh/
சோழப் பேரரசின் ராஜகுரு, அமைச்சர் மற்றும் அவைப்புலவர்,
செங்குந்தர் சமூக குலகுரு
கவிச்சக்கரவர்த்தி #ஒட்டக்கூத்தர்_செங்குந்தர் அவர்களுக்கு குருபூஜை தினத்தை முன்னிட்டு அவரின் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்த
நமது நாமக்கல் மாவட்டம்
#குமாரபாளையம் செங்குந்தர் சங்க நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-zu3EpusXs/
நம் சமூகத்தின் புகழ்மிக்க முன்னோர் சோழப் பேரரசின் ராஜகுரு, அமைச்சர் மற்றும் அவைப்புலவர்,
செங்குந்தர் சமூக குலகுரு
கவிச்சக்கரவர்த்தி #ஒட்டக்கூத்தர்_செங்குந்தர் அவர்களுக்கு குருபூஜை செய்த
நமது குன்றத்தூரில் (வட திருநாகேஸ்வரம்) மூன்று தலைமுறைகளை பார்த்து வழி நடத்திய நமது புலவர் திரு.மா.குப்புசாமிசெங்குந்தர் அவர்கள் படத்திறப்பு விழா செய்த தருணம்.இவ்விழாவை ஏற்பாடு செய்த குன்றத்தூர் செங்குந்தர் மரபினருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்💐💐
#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு instagr.am/p/C-zSDk4pBG8/
அனைத்து செங்குந்த முதலியார் சொந்தங்களுக்கும் வணக்கம். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் பெருந்தலைவர் கிராமத்தில். செங்குந்தர் குல சொக்க முதலி கூட்டம் பங்காளிகள் குலதெய்வக் கோயில் மகிழன நாதர் கோயில், கன்னிமார அம்மன் கோயில் கும்பாபிஷேகம் August 21 மற்றும் August 22 நடைபெறுவதால். அனைவரும் கலந்து இறையருள் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மற்றும் நம் கும்பாபிஷேகத்திற்கு 30 சித்தர் பெருமக்கள் கலந்து கொள்கிறார்கள். instagr.am/p/C-woXUCuWCq/
டி.வி.ராஜேஷ்வர் முதலியார்
Former IPS & Governor of 4 states
நாமக்கல் குருசாமிபாளையம் நெசவு பாரம்பரிய குடும்பத்தில் திரு.மாரிமுத்து முதலியார் மகனாக பிறந்தார்
இந்திய உளவுத்துறை 'ரா' அமைப்பின் ( IntelligenceBureau_India) முன்னாள் தலைவர்
உத்திரபிரதேசம்,மேற்கு வங்காளம், அருணாசல பிரதேசம்,சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்கள் ஆளுநராக ( GOVERNOR ) ஆக பல ஆண்டுகள் சேவை செய்து உள்ளார்.
இந்திய அரசியலமைப்பு, சிவில் சர்வீஸ் என 60ஆண்டுகள் நேர்மையாக பணியாற்றிய இவருக்கு நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூசண் விருது 2012-ம் ஆண்டு இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது.
இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS ) போன்ற இந்திய சிவில் துறையில் இருந்து கவர்னராக ஒருவர் இந்திய அரசால் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. instagr.am/p/C-e0BF-Jed5/
வைகை கரை தமிழர் நாகரீகம் கீழடி கி.மு 6ஆம் நூற்றாண்டு நெசவு செய்யும் கருவிகள்.
Full book: ift.tt/6lP3gaD instagr.am/p/C-VuMzYt0aE/