All Photos Tagged tamilredarmy
#வெள்ளையனே_வெளியேறு
#ஆகஸ்ட்22_1942
#கடலையூர்
சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்டதில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கு பெரும்பங்கு உண்டு.
1942ம் ஆண்டு நாடு முழுவதும் அண்ணல் காந்தியடிகள் தலைமையில் அடக்குமுறைகளை எதிர்த்து வெள்ளையேனே வேளியேறு என்ற கோஷத்தை முன் வைத்து போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா கடலையூர் கிராமத்தில் கைத்தறி நெசவு தொழில் செய்யும் தொழிலாளர்கள் வெயிலுகந்த முதலியார் தலைமையில் 1942ம் ஆண்டு ஆகஸ்டு 22ம் தேதி 34 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளையரின் துப்பாக்கி குண்டுக்கு ஒருவர் பலியானார். 2பேர் படுகாயம், மீதிபேர் மீது தடியடி பிரயோகம் செய்யப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து 1972ல் அப்போதைய *பாரத பிரதமர் இந்திராகாந்தி செப்பு பட்டயம்* வழங்கினார். கடலையூரில் ஒரு *ஸ்தூபி* உள்ளது. பல சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றத்தக்க வகையில் தமிழக அரசு கௌரவித்துள்ளது. வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்ட கடலையூர் கிராமத்தை சார்ந்த கைத்தறி நெசவு தொழிலைபுரிந்த *செங்குந்தர்* சமுதாயத்தை சேர்ந்த 34 சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் *மணிமண்டபம் கட்டி ஆண்டுதோறும் ஆகஸ்டு 22ம் தேதி போராட்ட வீரர்களுக்கு அரசு உரிய மரியாதை* செலுத்த வேண்டுமென
*தமிழ் செம்படைக் கழகம்* என வலியுறுத்துகிறது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க போராட்டத்தில் கடலையூரில் உயிர்நீத்த 34 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தியாகிகளின் நினைவு நாளான இன்று
*தமிழ் செம்படை கழகம்* சார்பாக
*வீரவணக்கம் வீரவணக்கம்*
*வீரவணக்கம் வீரவணக்கம்*
#செங்குந்தர் #sengunthar
#கைகோளர் #kaikolar
#தமிழ்செம்படை #tamilredarmy
#வெள்ளையனே_வெளியேறு instagr.am/p/C--qfhEJh9k/