View allAll Photos Tagged RedAlert
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை விடாது பெய்து வருகிறது. மேலும் கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அரைநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Readmore: ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம்!. வேலைவாங்கி தருவதாக சேலம் இளைஞரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி!.
idp7news.com/schools-leave-minister-anbil-mahesh-gave-a-t...