View allAll Photos Tagged HouseGames
இது ஒரு அறிவுத்திரன் விளையாட்டு. சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடும் பொழுதுபோக்கு விளையாட்டு.
வீட்டு திண்ணை, முற்றம் போன்ற இடங்களில் விளையாடுவர்.
இது இருவர் விளையாடும் விளையாட்டு.
ஒவ்வொருவரும் மூன்று எண்ணிக்கை கொண்ட கற்களையோ அல்லது புளிய முத்துக்களையோ கொண்டு விளையாடலாம்.
படத்தில் உள்ளது போல் சதுர வடிவம் மற்றும் உட்கோடுளையும் வரைந்து கொள்ளவேண்டும்.
முதல் நபர் ஒரு புல்லியில் ஒரு கல்லை வைக்க வேண்டும். மற்றொருவர் அடுத்து வேறொரு புல்லியில் வைக்க வேண்டும். இதேபோல் மாற்றி மாற்றி ஒவ்வொரு கல்லையும் வைத்து மூன்று கற்களும் நேர் கோட்டில் சேராவண்ணம் விளையாட வேண்டும். மூன்று கற்களும் நேர் கோட்டில் சேர்ந்தால் அவர் வெற்றி பெற்றவராவர். இவ்வாறு விளையாடி மகிழ்வர்
தாய விளையாட்டு மிகப் பழையதான விளையாட்டாதலால் முதலில் யார் கண்டுபிடித்தார்கள் என்னும் விவரம் தெரியாது. இருப்பினும் இந்தியா வரலாற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. சூதாட்டம், சொக்கட்டான், சோழி விளையாட்டு போன்றவை தமிழ் குறிப்பெயர்களாகும்.
•மாபாரதத்தில் பாண்டவ மன்னர்கள் நாட்டையும், பாஞ்சலியையும் பணையமாக்கிய சகுனியின் வஞ்சக விளையாட்டகவும்,
•நளவெண்பாவில் நளன் கலியின் மூலம் புட்கரனால் தோற்கடிக்கப்பட்டு நாட்டை இழந்ததாகவும் குறிப்புகள் உள்ளன.
•மேலும் அண்மைய ஆராய்ச்சிகளின் மூலம் மெக்ஸிகோவில் வாழ்ந்த மாயன்கள் இவ்விளையட்டை விளையாண்ட குகைச்சித்திரங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
•நாம் இந்த விளையாட்டை மாரி காலங்களில் பொழுது போக்கிற்காக விளையாடுவார்கள். ஐந்துக்கு ஐந்து சதுரங்களால் அமைந்த ஒரு கோட்டுத் தளத்தில் நான்கு பக்கமும் நாலு பேர் அமர்ந்து விளையாடலாம். எதிரெதிரே இருப்பவர்கள் கூட்டாகவோ தனியாகவோ விளையாடலாம். கூட்டுச் சேர்ந்து விளையாடுவதைக் கன்னை கட்டுதல் என்றும் சொல்லப்படும்.
•ஒவ்வொருவருக்கும் நான்கு காய்கள் இருக்கும். இவற்றைத் தளத்தின் சதுரங்களினூடே பயணித்து மையத்திலிருக்கும் பழத்தை அடைந்து மீண்டு வருதலே விளயாட்டாகும். முதலில் நான்கு காய்களையும் மீண்டு கொண்டு வருபவர் வெற்றி பெறுவார்.