View allAll Photos Tagged Homam
Sakthi Peeda Yagam - Srividhya Homam...
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் முனீஸ்வரர் பூஜையுடன் நவீன கோசாலை திறப்பு விழா, நவாவரண பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், தனாகர்ஷண யக்ஞம், 51 யாக குண்டங்களில் 51 சக்திபீட யாகம், சீதா கல்யாணம், 108 லக்ஷ்மி பூஜையுடன் சிறப்பு வைபவங்கள் துவங்கியது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்ப்டி, தன்வந்திரி பீடத்தில் இன்று 26.05.2018 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் 1.30 மணி வரை கோபூஜை, கலச பூஜை, யாகசாலை பூஜை, மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நக்ஷத்திர ஹோமம், நவாவரண பூஜையும் மாலை 4.00 மணியளவில் ஸ்ரீவித்யா ஹோமமும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை 27.05.2018 ஞாயிறுக் கிழமை காலை 8.00 மணி முதல் ஸ்ரீ பால் முனீஸ்வர்ருக்கு பொங்கல் வைத்து மஹா அபிஷேகமும், சிறப்பு பூஜையும், 09.00 மணிக்கு நவீன கோசாலை திறப்பு விழாவும், 10.00 மணிக்கு தனாகர்ஷண யக்ஞத்துடன், பாண்டிச்சேரி பக்தர்கள் பங்கேற்கும் 51 யாக குண்டங்களில் 51 பெண்கள் பங்கேற்று நடைபெறும் 51 சக்தி பீட யாகமும், ஸ்ரீ ஆரோக்யல்க்ஷ்மி, ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ பிரித்யங்கிரா தேவி, மாமேரு மற்றும் குபேர லக்ஷ்மிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும், மாலை 3.30 மணி முதல் 5.00 மணி வரை காஞ்சி மடம் ஆஸ்தான வித்வான் ஸ்ரீசந்த் முரளிதாஸ் பாகவதர், பொழிச்சலூர், சென்னை அவர்கள் நிகழ்த்தும் சீதா கல்யாண வைபவமும், மாலை 6.00 மணிக்கு 108 பெண்கள் பங்கேற்கும் 108 லக்ஷ்மி பூஜையும் நடைபெற உள்ளது. இதில் காஞ்சிபுரம் ஸ்ரீதேவி லலிதாம்பிகா பீடம், ஸ்ரீமாதா பாலானந்த ஸ்வாமிகள், கொடுமுடி ஆட்சி பீடம் மாதாஜி ராணியம்மாள் மற்றும் கோவை ராஜராஜேஸ்வரி பீடம் ஸ்வாமிகள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Ekadasi Amla Powder Abhishekam - Vastu Homam....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமத்துடன் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்.....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 22.08.2018 காலை 10.00 மணி முதல் மஹா தன்வந்திரி ஹோமமும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
இதில் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாஸ்து நாளான இன்று வாஸ்து ஹோமம் நடைபெற்றது.....
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி சயன கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும் பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில் இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம். பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண், கல், சிமெண்ட், இரும்பு, மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம் அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.
வாஸ்து நாளான இன்று 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் நடைபெற்றது.
வாஸ்து ஹோம பிரசாதம் : இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Revere Lord Narasimha on this auspicious day of Narasimha Jayanthi to get relief from evil forces and past life sins. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Rama Navami Special Rituals brings prosperity and success in life. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Navaratri Pooja - Sulini Duraga Homam - Shirdi Sai Baba's 100th Aradhanai ......
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு சகல தேவதா ஹோமத்துடன் சீரடி சாயிபாபாவின் 100 ஆம் அண்டு சிறப்பு ஆராதனை விழா நடைபெற்றது......
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நவராத்திரியை முன்னிட்டு சூலினி துர்கா ஹோமம், குபேர சாம்ராஜ்ய லக்ஷ்மி ஹோமம், மஹா சரஸ்வதி ஹோமம், ருத்ர ஹோமம், அஷ்ட பைரவர் சகித காலபைரவர் ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், காயத்ரீ ஹோமம், அன்னபூரணி ஹோமம், போன்ற பல்வேறு ஹோமங்கள் நடைபெற்று உரிய தெய்வங்களுக்கு மஹா அபிஷேகத்துடன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு அக்ஷராப்பியாச பூஜையும் சரஸ்வதி தேவிக்கு பாலபிஷேகமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சீரடி சாயிபாபாவின் 100 ஆம் ஆண்டு சமாதி தினத்தை முன்னிட்டு சீரடி சாயிபாபா மூலமந்திர ஹோமமும், சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. மேலும் நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்வந்திரி பீடத்தில் மழை வேண்டியும்
இயற்கை வளம் பெறவும் சப்த கன்னியர் பூஜையுடன் வருண ஜப ஹோமம் நடைபெற்றது.....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வளர்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று 19.05.2018 சனிக்கிழமை குற்றாலம் அகஸ்த்தியர் ஆசிரமம் நிறுவனர் மற்றும் ஜீவநாடி வாசகர் திரு. முத்துகுமார ஸ்வாமி அவர்கள் முன்னிலையில், அக்னி நக்ஷத்திரத்தின் உஷ்ணாதிக்கம் குறையவும் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்கவும், பருவமழை பொழிந்து விவசாயம் செழிக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் வற்றாமல் இருக்கவும், அனைத்து நதிகள் மற்றும் ஆறுகளில் நீர் பெருக்கடுத்து ஓடவும், மண் வளம் மழை வளத்துடன் இயற்கை வளம் பெறவும், விவசாய பெருமக்கள் மகிழ்ச்சி அடையவும், கிராம தேவதையை போற்றி ஆராதிக்கும் வகையில் தன்வந்திரி பீடத்தில் சப்தமாதாக்கள் பிராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் பூஜையுடன், வருண ஜப ஹோமமும் நடைபெற்றது..
வருண பகவான் யார் :
இந்த உலகத்தின் அரசனாக வருண பகவான் இருந்து வருகிறார். உலகத்தின் உயரத்தில் இருந்து வசித்துவரும் அவர் நமக்கு அவ்வப்பொழுது மழையை பொழிந்து அருள் புரியுகிறார். இவர் எல்லையற்ற அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறர். ஆயிரம் கண்களை கொண்டு உலகத்தை கண்காணித்து காத்து வருகிறார்.
ஒழுக்கநெறியின் கடவுளும் இவரே எனலாம். ரிக்வேதத்தில் வருண பகவான் முக்கியமான தெய்வங்களில் ஒருவர், இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும் கடல், நீர்நிலைகள் மற்றும் மழைக்கு பொறுப்பான கடவுளே வருணன் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவுகிறது. வருண பகவானின் மகன் தமிழ் முனிவரான அகஸ்தியர் என்பதால், வருணன் தமிழுக்கும் மிகவும் நெருக்கமானவர் எனலாம்.
தொல்காப்பியத்திலும் வருண பகவான் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தெய்வத்தின் கண் இமைகளில் இருந்து மழைப் பெய்வதாகவும் கூறப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த வருண பகவானை வேண்டி தன்வந்திரி பீடத்தில் மழை வேண்டியும் பருவமழை தவராமல் பெய்யவும், அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறயவும், விவசாயம் பாதிக்கப்படாமல் இருக்கவும், குடிநீர் தட்டுப்பாடு வராமல் இருக்கவும், நீர் நிலை ஆதாரங்கள் பெறுகவும், இயற்கை வளம் பெறவும் சப்த கன்னியர் பூஜையுடன் வருண ஜப ஹோமம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Murugan Temple of North America
6300 Princess Garden Parkway, Lanham, MD 20706, USA
Thai poosam Celebrations for Lord Washington Murugan
-Second yaga poojai & Homam
-Third yaga poojai, Endhirasthapanam, poornahudhi, Ashtabandanam
Kalashtami Puja is one of the best ways to seek blessings of Lord Kalabhairava, a form of Shiva, also get protection from eight directions of universe.More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Kamadhenu Homam...
தன்வந்திரி பீடத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு
கொடிய சாபங்கள் விலக காமதேனு ஹோமம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 20.07.2018 ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கொடிய சாபங்கள் விளக ஸ்ரீ காமதேனு ஹோமத்துடன் கோமாதா பூஜை நடைபெற்றது.
மங்களகர்மான ஆடி மாதத்தில் கோ-பூஜை செய்து வழிபடுவது நல்லது. வாழ்க்கையில் பெரும் புண்ணியத்தைத் தருவது கோபூஜை. கோமாதாவின் உடலில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், இதர தெய்வங்களும், ரிஷிகளும், அஷ்டவசுக்கள் அடக்கம் என்கிறது வேத நூல்கள்.
பசுவை பெற்ற தாய்க்கு இணையாக கருதிதான் நாம் ‘கோமாதா’ என்று அழைக்கிறோம். கோமாதா பூஜை செய்யும் போது பசுவை முன்புறமாக தரிசிப்பதை விட, பின்புறமாக தரிசிப்பது மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பசுவின் பின்புறத்தில்தான் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். பசுவை வழி படும்போது, முன் நெற்றி, வால் பகுதிகளில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவிக்க வேண்டும். பசுவின் சாணமும் லட்சுமி அம்சம். எனவேதான் வீட்டு வாசலில் சாணம் கரைத்து தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது என்பது, அகிலத்தைக் காக்கும் அன்னை பராசக்திக்கு பூஜை செய்வதற்கு ஒப்பானதாகும். பசுவின் பால், நெய் கொண்டே யாகங்கள் செய்விக்கப்படுகின்றன. இவ்வாறு யாகங்கள் செய்வதால் மழை பொழியும் என்பது ஐதீகம்.
இந்த ஹோமம் பித்ரு சாபங்கள், பித்ரு தோஷங்கள், பலவகையான சாபங்கள் விலகவும், செல்வச் செழிப்பு உண்டாகவும், குழந்தை இல்லாமல் துன்பப்படுபவர்களுக்கு, புத்திரப்பேறு வாய்க்கவும், தீய சக்திகள் விலகவும், கல்வியும், செல்வச் செழிப்பும் வந்து சேரவும். முற்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கவும், மன சஞ்சலங்கள் நீங்கி மகிழ்ச்சி குடிகொள்ளவும், தீய சக்திகள் விலகவும், சௌபாக்கியங்கள் பெறவும் நடைபெற்றது. மேலும் இரண்டாவது நாளாக தன்வந்திரி கோடி ஜப யக்ஞமும் நடைபெற்றது. இதில் கோவை R.V.S. கல்வி நிறுவனங்களின் சேர்மன் திரு. கே.வி. குப்புசாமி அவர்கள், வேலூர் துர்காபவன் உரிமையாளர் திரு. உதயசங்கர், மற்றும் கர்னாடக பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பதினர் தெரிவித்தனர்.
தொடர்புக்கு :
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in
Email: danvantripeedam@gmail.com
Pacifies the Malefic Sun, Mars & Saturn, Promises Protection & Success in Every Walk of Life
www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Wordist Event Photography – Multi Camera Setup for Exclusive Candids, Memorable Moments, Professional Photography, Professional Event Photography, Professional Event Photographers | Client - Anusha Gopal and Ananth Lalithakumar
Wordist - #besurprised is a Digital Marketing and Creative Agency based in Shenoy Nagar, Chennai India. Wordist is spread into 5 Verticals - Brand Identity | Advertising | Production | Social Media Marketing | Events. And as an Advertising Agency, Wordist follows 3 rules - Simple, Ultra Fast and Affordable.
These are Photos taken at Ishaan’s Ayush Homam. The concept was to come up with a creative shoot and it is conceptualised, shot and designed by the Team #wordistphotos. And our client is Anusha Gopal and Ananth Lalithakumar. We were asked to come up with a creative design.
These are few of our creative designs and works and to all our dear Wordisters - you can expect our regular creative updates in this particular album of our page! So follow Wordist to see more of our updates. Want to know more or want anything to be Written, Printed, Designed or Filmed? Simple! Call us @ +91 90031 72100 | +91 44 43300 100 or mail us your requirements to sayhi@wordist.in and we shall meet up for a coffee or chai and perhaps talk business too!
Ekadasi Amla Powder Abhishekam - Vastu Homam....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமத்துடன் தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம்.....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், துன்பங்கள் துயரங்கள் அகலவும், உடல் நோய் மன நோய் நீங்கவும், வலிகளில் இருந்து நிவாரணம் பெறவும், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 22.08.2018 காலை 10.00 மணி முதல் மஹா தன்வந்திரி ஹோமமும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நெல்லிப்பொடி அபிஷேகம் நடைபெற்றது.
இதில் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
வாஸ்து நாளான இன்று வாஸ்து ஹோமம் நடைபெற்றது.....
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :
தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி சயன கோலத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அமைப்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வாஸ்து என்கிற வார்த்தைக்கு வஸ்து என்று பொருள். வஸ்து என்பது நாம் வசிக்கும் பூமி, நிலம் மற்றும் அதில் உள்ள பொருகளாகும். வஸ்துவில் இருந்து வந்தது தான் வாஸ்து எனலாம். பூமி, நிலம் போன்ற பொருள்களில் இருந்து கிடைக்கும் மண், கல், சிமெண்ட், இரும்பு, மரம் போன்ற வஸ்துக்களை கொண்டு, நாம் நமக்காக இருப்பிடம் அமைத்து கொள்ள விரும்பும் போது நாம் பார்ப்பது தான் வாஸ்து சாஸ்திரம் ஆகும்.
வாஸ்து நாளான இன்று 22.08.2018 புதன்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை, வாஸ்து தோஷங்களால் ஏற்படும் தடைகள் குறையவும், பூர்ண வாஸ்துப்படி நாம் வாழும் இடங்களை மாற்றி அமைத்து கொள்ளவும். வாஸ்து பிரச்சனைகளால் ஏற்படும் போராட்டங்கள் நீங்கி மன உளச்சலில் இருந்து வெளியேறி வாழ்க்கை பிரகாசமாக வாழ வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சாந்தி பூஜைகளும் நடைபெற்றது.
வாஸ்து ஹோம பிரசாதம் : இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஜெயந்தியைை முன்னிட்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம். ஜூலை 10ந்தேதி் முதல் 12வரை நடந்தது.
வாலாஜாபேட்டை, ஜீலை 12 வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தனவந்திரி பீடத்தில் ஸ்ரீசுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை 20 க்கும் மேற்பட்ட வைணவர்களை கொண்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம் நடந்தது.
இதையொட்டி 09ம் தேதி சனிக்கிழமை கருட ஹோமம் நடைபெற்றது.
மழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் மக்கள் ஆரோக்கியமாக
இருக்க வேண்டியும் நடந்த இந்த ஹோமத்தில் வடநாடு மற்றும் ஆந்திர
மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு ஸ்வாமிகள் சென்று புனித நீரை சேகரித்துவந்து இந்த யாகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பீடத்தில் உள்ள சுதர்சன மூலவருக்கு நவகலச அபிஷேக திருமஞ்சனம் செய்யப்பட்டன.
ஸ்ரீ சுசர்சன்ஹோம பலன்கள்: வாழ்வில் பல நன்மைகள்ப்பெறுவதற்கு நாம் ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வது அவசியம். ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களை கொடுக்க வல்லது. தீர்க்க ஆயுசு பெறவும், பூரண ஆயுள்கிடைக்கவும், நினைத்து நிறைவேறவும்
அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், மனநலம் குணமாகி புத்தி பேலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர் சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்கு தெரியாத நோய்கள் நீங்கவும், கோபம் தணியவும் பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
சுதர்சன் ஹேமத்தில் வெண்காடு. எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால்பாயசம், அரும்புல், சர்க்கரை பொங்கல், தயார், நாயுருவி, நெய், பஞ்சகவியம்,கருநொச்சி இருமுள், நீலஊத்தபூ,உள்ளிட்டபல்வேறு பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கபட்டன.
சுதர்சன பெருமாளுக்குரிய 16 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகமும், விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
ஹோமத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு, நந்தகோபால் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் சென்னை திரு.முருகைய்யா ஐ.ஏ.எஸ் வாலாஜா வட்டாட்சியர் திருமதி.பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆந்திரா தமிழ் நாடு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்த தகவலை பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்
தன்வந்திரி யாகம் நடத்திட பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமயில் 13 நபர்கள் கொண்ட குழவினர் புதன் கிழமை முதல் ஞாயிறு வரை காசி, அயோத்தி,நைமிசாரண்யம்,மற்றும் லக்னோ ஆகிய ஷேத்திரங்களில் யாத்திரை செல்கின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Rama Navami Special Rituals helps to get relief from sins and past life bad karma. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Akhanda Sundara Kandam Parayanam basically deals with the greatness of Hanuman and when read or heard on the day of Rama Navami, removes obstacles in all aspects of life, realising health, wealth, progeny and prosperity.
To Know More Details click here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
Murugan Temple of North America
6300 Princess Garden Parkway, Lanham, MD 20706, USA
Thai poosam Celebrations for Lord Washington Murugan
-Second yaga poojai & Homam
-Third yaga poojai, Endhirasthapanam, poornahudhi, Ashtabandanam