View allAll Photos Tagged Homam
தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஜெயந்தியைை முன்னிட்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம். ஜூலை 10ந்தேதி் முதல் 12வரை நடந்தது.
வாலாஜாபேட்டை, ஜீலை 12 வாலாஜாபேட்டை அடுத்த அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தனவந்திரி பீடத்தில் ஸ்ரீசுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை 20 க்கும் மேற்பட்ட வைணவர்களை கொண்டு இலட்ச ஜபஹோமத்துடன் மகா சுதர்சன ஹோமம் நடந்தது.
இதையொட்டி 09ம் தேதி சனிக்கிழமை கருட ஹோமம் நடைபெற்றது.
மழை வேண்டியும் இயற்கை வளம் வேண்டியும் மக்கள் ஆரோக்கியமாக
இருக்க வேண்டியும் நடந்த இந்த ஹோமத்தில் வடநாடு மற்றும் ஆந்திர
மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களுக்கு ஸ்வாமிகள் சென்று புனித நீரை சேகரித்துவந்து இந்த யாகம் நடைபெற்றது.அதனை தொடர்ந்து பீடத்தில் உள்ள சுதர்சன மூலவருக்கு நவகலச அபிஷேக திருமஞ்சனம் செய்யப்பட்டன.
ஸ்ரீ சுசர்சன்ஹோம பலன்கள்: வாழ்வில் பல நன்மைகள்ப்பெறுவதற்கு நாம் ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்வது அவசியம். ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களை கொடுக்க வல்லது. தீர்க்க ஆயுசு பெறவும், பூரண ஆயுள்கிடைக்கவும், நினைத்து நிறைவேறவும்
அஷ்ட ஐஸ்வர்யம் பெறவும், புத்தியில் தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள் வராமல் தடுக்கவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், மனநலம் குணமாகி புத்தி பேலித்தவர்கள் நலம் பெறவும், விரைவில் மனோபலம் பெறவும், தீராத நோய்கள் தீரவும், கேன்சர் சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்கு தெரியாத நோய்கள் நீங்கவும், கோபம் தணியவும் பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக்கொள்ளலாம்.
சுதர்சன் ஹேமத்தில் வெண்காடு. எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால்பாயசம், அரும்புல், சர்க்கரை பொங்கல், தயார், நாயுருவி, நெய், பஞ்சகவியம்,கருநொச்சி இருமுள், நீலஊத்தபூ,உள்ளிட்டபல்வேறு பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கபட்டன.
சுதர்சன பெருமாளுக்குரிய 16 விதமான அபிஷேக திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகமும், விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
ஹோமத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு, நந்தகோபால் கூடுதல் கண்காணிப்பாளர் திரு.பாலகிருஷ்ணன் சென்னை திரு.முருகைய்யா ஐ.ஏ.எஸ் வாலாஜா வட்டாட்சியர் திருமதி.பிரியா மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆந்திரா தமிழ் நாடு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இந்த தகவலை பீடாதிபதி டாக்டர் முரளிதர சுவாமிகள் தெரிவித்தார்
தன்வந்திரி யாகம் நடத்திட பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமயில் 13 நபர்கள் கொண்ட குழவினர் புதன் கிழமை முதல் ஞாயிறு வரை காசி, அயோத்தி,நைமிசாரண்யம்,மற்றும் லக்னோ ஆகிய ஷேத்திரங்களில் யாத்திரை செல்கின்றனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்
தெரிவித்தனர்.
Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyurGanapathy homam Navagraha homam Mrithyunjaya homam Ayul homam Thanvadhiri homam Mahavishnu homam Mahalakshmi homam Sudharshana homam
Maha shivratri is very auspicious day for lord shiva.Ekadasa Rudra Homam Helps destroy bad temper in a very effective way.To know more visit www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
THE GREAT MOMENTS!THE GREAT MIRACLE OF LORD NAGENDRA SWAMY.{HOLY MYTHOLOGICAL SERPENT), IN YAGNAM (HOLY RITUAL FIRE),ON 29-05-2013,AT GARLAVODDU SRI LAKSHMI NARASIMHA SWAMY TEMPLE,WHILE MANAVU CONDUCTING BRAHMOSTAVAMS FINAL DAY ON "PURNAHUTI" OCCASSION
Karthyayani Homam - Gandharva Raja Homam - Santhana Gopala Yagam.....
தன்வந்திரி பீடத்தில் பௌர்ணமியை முன்னிட்டு கல்யாண வரம் தரும் கந்தர்வ ராஜ ஹோமம் - காத்யாயனி யாகத்துடன் குழந்தை வரம் தரும் கோபால யாகம் நடைபெற்றது.....
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி இன்று 24.09.2018 திங்கள்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்-பெண் திருமணத் தடை நீங்க காத்தயாயனி யாகம், சுயம்வர கலாபார்வதி யாகம், கந்தர்வ ராஜ ஹோமம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகமும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற்றது.
தெய்வீக மனம் கமழும் ஸ்ரீ தன்வந்திரி பீடம் :
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் தினசரி ஹோமங்களாலும், மந்திர ஜபங்களாலும், ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆத்மார்த்த பூஜைகளின் மூலமாகவும், ஸ்ரீ தன்வந்திரி பகவானின் பார்வையினாலும், ஹோம புகையினாலும், மூலிகை விருட்சங்களாலும், பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி ஸ்ரீ தன்வந்திரி மந்திரத்தின் அதிர்வுகளாலும், பல்வேறு தெய்வங்களின் தெய்வீக தன்மையினாலும், புனித பூமியினாலும், இங்கு வருகை புரியும் புனித ஆத்மாக்களாலும் இத்தலத்திற்கு பல்வேறு வகையிலும் ஆகர்ஷணங்கள் ஏற்பட்டு வளாகம் முழுவதும் அதிர் வலைகளை எதிரொலித்துக் கொண்டிருக்கிறது இந்த மஹா ஆரோக்ய பீடம். இச்சிறப்பின் மூலமாக இங்கு நடைபெறும் யாக பூஜைகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்து வருகிறது. மேலும் பங்கேற்கும் நபர்கள் மிகவும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் செல்கின்றனர்.
இப் பீடத்தில் பிரதி மாதம் பௌர்ணமியில் குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை வரம் வேண்டி சந்தான பரமேஸ்வரர் யாகம், சந்தான கோபால யாகம், நவநீத கிருஷ்ணர் யாகம், போன்ற யாகங்களும் திருமணம் ஆகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற கந்தர்வ ராஜ யாகமும், பெண்களின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டி சுயம்வர கலாபார்வதி யாகம், காமேஸ்வரி துளசி யக்ஞமும் காத்யாயனி யாகம், மங்கள கௌரி யாகம் போன்ற யாகங்கள் பக்தர்களின் விருப்பத்திற்கு தகுந்தவாறு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற பௌர்ணமி யாகத்தில் களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், சுக்கிர தோஷம் அகலவும், கால சர்ப தோஷம், பித்ரு தோஷங்கள் நீங்கவும், பல்வேறு வகையான மந்திரங்களை உச்சரித்து நூறுக்கும் மேற்பட்ட மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், நெய், தேன் கொண்டு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளாணைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கலச பூஜை, காலசக்கிர பூஜை, விநாயகர் வழிபாடு, சிவன் – பார்வதி வழிபாடு, ஸ்ரீ நவனீத கிருஷ்ணருக்கு வெண்ணெய் சார்த்தி வைபவமாக நடைபெற்றது.
கலசாபிஷேகமும் தொட்டில் பூஜையும் :
பின்பு திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு கலசாபிஷேகமும், குழந்தை வரம் வேண்டி வந்துள்ள தமபதிகள் ஸ்ரீ கிருஷ்ணருக்கு தொட்டில் பூஜையும் நடைபெற்று, ஸ்வாமிகளின் ஆசி பெற்று சிறப்பு அன்னதானத்தில் பங்கேற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.
மாலை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஏக சரீர ராகு – கேதுவிற்கு அன்னதோஷம் விலகவும், உணவு செரிமானம் ஏற்படவும், வயிறு உபாதைகள் நீங்கவும் அன்னாபிஷேகமும், 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ சத்திய நாராயண பெருமாளுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyurGanapathy homam Navagraha homam Mrithyunjaya homam Ayul homam Thanvadhiri homam Mahavishnu homam Mahalakshmi homam Sudharshana homam
Workship goddess lakshmi on akshaya tritiya to get blessings and solve the financial issues.Read More :http://www.vedicfolks.com/life-time-management/karma-remedies/shared-homam/akshaya-tritiya.html
Lord Ganapathi bless you with treasure of health, wealth & happiness on Ganesh Chaturthi festival.
Ganesh Chaturthi Special Rituals : www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
திருவோண ஹோமமும் தைலாபிஷேகமும்.........
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 14.02.2018 புதன் கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி, மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்கவும் சகல ஐஸ்வர்யம் பெறவும் திருவோண ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் நடைபெற்றது.
Shashtiapthapurthy 60th birthday thirukkadaiyurGanapathy homam Navagraha homam Mrithyunjaya homam Ayul homam Thanvadhiri homam Mahavishnu homam Mahalakshmi homam Sudharshana homam
Kodi Japa Maha Danvantri Homam - 100th Day (28.10.2018)...
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமம் நிறைவு. மாண்புமிகு நீதியரசர் திரு. முரளிதரன் அவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 100 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் இன்று 28.10.2018 காலை நிறைவு பெற்றது.
இன்று காலை 7.00 மணியளவில் வேத பாராயணம், கோபூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் 11.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்று, கலச புறப்பாடு செய்து ஸ்ரீ தன்வந்திரி மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி மற்றும், சுதர்சனாழ்வாருக்கு பஞ்சசூக்த பாராயணத்துடன் 48 கலசங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.M.V. முரளிதரன் அவர்கள், திருமதி. முரளிதரன் அவர்கள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு. மோகனானந்த ஸ்வாமிகள், திருவண்ணாமலை சீரடி சாயிபாபா ஆலய நிர்வாகி திரு. சாயி ரவிச்சந்திரன் அவர்கள், கொடுமுடி ஆட்சி பீடம் தவத்திரு. ராணியம்மாள், சென்னை தவத்திரு. Dr. கவி முரளிகிருஷ்ணன், சென்னை பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள், சினிமா தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், வாலாஜாபேட்டை Dr. குழந்தைவேல் குடும்பத்தினர், வேலூர் தென்னிந்திய புரோகிதர் சங்க நிர்வாகி திரு. V.R. சீதாராமன் அவர்கள், ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆந்திரா, கர்னாடக, கேரள, பாண்டிச்சேரி மாநிலத்தில் சேர்ந்த பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விரைவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா பத்திரிகையை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெளியிட மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி ஜைன மடாதிபதி திரு. லக்ஷ்மிசேன பட்டாரக்கர அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் விழா இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Wordist Event Photography – Multi Camera Setup for Exclusive Candids, Memorable Moments, Professional Photography, Professional Event Photography, Professional Event Photographers | Client - Anusha Gopal and Ananth Lalithakumar
Wordist - #besurprised is a Digital Marketing and Creative Agency based in Shenoy Nagar, Chennai India. Wordist is spread into 5 Verticals - Brand Identity | Advertising | Production | Social Media Marketing | Events. And as an Advertising Agency, Wordist follows 3 rules - Simple, Ultra Fast and Affordable.
These are Photos taken at Ishaan’s Ayush Homam. The concept was to come up with a creative shoot and it is conceptualised, shot and designed by the Team #wordistphotos. And our client is Anusha Gopal and Ananth Lalithakumar. We were asked to come up with a creative design.
These are few of our creative designs and works and to all our dear Wordisters - you can expect our regular creative updates in this particular album of our page! So follow Wordist to see more of our updates. Want to know more or want anything to be Written, Printed, Designed or Filmed? Simple! Call us @ +91 90031 72100 | +91 44 43300 100 or mail us your requirements to sayhi@wordist.in and we shall meet up for a coffee or chai and perhaps talk business too!
Wordist Event Photography – Multi Camera Setup for Exclusive Candids, Memorable Moments, Professional Photography, Professional Event Photography, Professional Event Photographers | Client - Anusha Gopal and Ananth Lalithakumar
Wordist - #besurprised is a Digital Marketing and Creative Agency based in Shenoy Nagar, Chennai India. Wordist is spread into 5 Verticals - Brand Identity | Advertising | Production | Social Media Marketing | Events. And as an Advertising Agency, Wordist follows 3 rules - Simple, Ultra Fast and Affordable.
These are Photos taken at Ishaan’s Ayush Homam. The concept was to come up with a creative shoot and it is conceptualised, shot and designed by the Team #wordistphotos. And our client is Anusha Gopal and Ananth Lalithakumar. We were asked to come up with a creative design.
These are few of our creative designs and works and to all our dear Wordisters - you can expect our regular creative updates in this particular album of our page! So follow Wordist to see more of our updates. Want to know more or want anything to be Written, Printed, Designed or Filmed? Simple! Call us @ +91 90031 72100 | +91 44 43300 100 or mail us your requirements to sayhi@wordist.in and we shall meet up for a coffee or chai and perhaps talk business too!
Murugan Temple of North America
6300 Princess Garden Parkway, Lanham, MD 20706, USA
Thai poosam Celebrations for Lord Washington Murugan
-Second yaga poojai & Homam
-Third yaga poojai, Endhirasthapanam, poornahudhi, Ashtabandanam
Navratri Puja Special Rituals helps to remove malefic effects of planets, especially Rahu and Ketu. More Details Click Here www.vedicfolks.com/life-time-management/karma-remedies/sh...
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆனி அமாவாசையில்
ப்ரத்யங்கிரா ஹோமத்துடன் 21 ஹோமங்கள் நடைபெற்றது.
உலகில் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுய நலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம் செய்வதில்லை. நம்முடைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுவது ஹோமங்கள் என்கிற யாகங்கள் எனலாம்.
உலக நலன் கருதி வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 11.07.2018 புதன்கிழமை, 12.07.2018 வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் ஆனி அமாவாசையை முன்னிட்டு ப்ரத்யங்கிரா ஹோமத்துடன், ஸ்ரீ தரணி ஹோமம், ஸ்ரீ நீலா சரஸ்வதி ஹோமம், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ க்ருட பஞ்சாக்ஷரி ஹோமம், ஸ்ரீ தக்ஷண காளி ஹோமம், ஸ்ரீ ஆஞ்சனேய ஹோமம், ஸ்ரஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி ஹோமம், ஸ்ரீ மஹா சாஸ்தா ஹோமம், பாசுபதாஸ்தர ஹோமம், வஸீதாரா மஹாலக்ஷ்மி ஹோமம் , ஸ்ரீ காயத்ரீ ஹோமம், ஸ்ரீ வராஹி பிரயோக ஹோமம், பூர்ண புஷ்கலா ஹோமம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ குபேர ஹோமம், ஸ்ரீ சக்தி ஹோமம், ஸ்ரீ வடுக பைரவ ஹோமம் ஸ்ரீ காமாக்யா மஹா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், அஸ்வாரூட ஹோமம், ஸ்ரீ பாலமுருகன் ஹோமம் ஆகிய 21 ஹோமங்கள் நேற்று 11.07.2018 புதன்கிழமை துவங்கி, இன்று 12.07.2018 வியாழக்கிழமை பூர்த்தி பெற்றது. இந்த யாகத்தில் பல்வேறு மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், சித்ரான்னங்கள் சேர்க்கப்பட்டது.
இதில் மோரீஷியஸ் (ரீயூனியன்) நாட்டில் இருந்து ஸ்வாமி அமேயான்ந்த அவர்கள் மற்றும் பலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த யாகத்தில் ஜாதகத்தில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, போன்ற கொடுமையான பலன்கள் நடப்பவர்களுக்கு பாதிப்புகள் குறையவும், குடும்ப, தொழில் வியாபாரம், மற்றும் திருமணம் தடைகள் விலகவும், கணவன் மனைவி பிரச்சனைகள், தீராத கடன் சுமை நீங்க, வெளியே கொடுத்த பணம் வசூல் ஆக, எதிரி தொல்லைகள், வீடு நிலம் சொத்து பிரச்சனைகள், செய்வினை பில்லி சூனியம் ஏவல் பேய் பிசாசு தீய சக்தி தொந்தரவு, ஜாதக ரீதியாக உள்ள அனைத்து வித தோஷங்கள் அகலவும், குலதெய்வம் வசியம், குழந்தைகள் சொல் பேச்சு கேட்டு படிப்பில் நல்ல மதிப்பெண் பெற, தொடர் தோல்விகள், மன குழப்பம், மற்றும் மனித வாழ்வில் ஏற்படும் சகல விதமான பிரச்சனைகள் அகலவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதமும், சிறப்பு அன்னதானமும் வழங்கபட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.