sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
தெய்வதிரு முருகேச முதலியார் ஐயாவின் பிறந்த தினம் இன்று பழனி முருகன் கோவிலுக்கு, 25 ஆண்டு காலம் நிர்வாக அறங்காவலராக இருந்தார். பழநியாண்டவர் உலா வருவதற்கு 17.081947 அன்று தங்கத் தேர் தானமாக வழங்கினார். (இந்து கோவிலில் பயன்படுத்தப்பட்ட முதல் தங்கம் இதுவே ஆகும்) பழனி முருகனுக்கு வைரவேல் மற்றும் தங்க மயில் வாகனம் செய்து கொடுத்தார். 1963ஆம் ஆண்டு பழனி மலைமீது விஞ்ச் (மின் இழுவை இரயில்) அமைத்துக்கொடுத்தார். பழனி கிரிவலைப்பாதையில் நான்கு திசைகளிலும் துர்க்கை அம்மன் ஆலயம் அமைத்தார். திருப்பதி திருவேங்கட ஏழுமலையானை வழிபட வரும் அடியவர்கள் தங்குவதற்கு திருமலையில் விடுதியை அமைத்துத் தந்துள்ளார். திருத்தணியில் முருகன் கோவிலில் படிக்கட்டுகள் மண்டபங்கள் கட்டி கொடுத்தார். ஈரோட்டில் தனலட்சுமி பிரசவ வார்டு என்ற பெயரில் மகப்பேறு நிலையம் ஒன்றை நிறுவினார். காசநோய் எனும் டி.பி. தீர, ஈரோடு பெருந்துறையில் காசநோய் சேனட்டோரியம் மருத்துவமனையில் விடுதி மற்றும் ஆய்வுக்கூடம் கட்டித்தந்தார். ஈரோடு சிக்கைய்யா நாயகர் மாசனக்கல்லூரி நிறுவுவதற்காகவும் 50களிலேயே பல லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். மேலும் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர், மதுரை லேடி டொக் பெருமாட்டி கல்லூரிக்கு (6,000 பவுன்)ஆறாயிரம் தங்க பொற்காசுகளை நன்கொடையாக அளித்தார். அன்றைய தமிழக முதல்வர்(1963) பக்தவத்சலம் முதலியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, பழனியில் முருகேச முதலியார் தொழிற்சாலை துவங்க வைத்திருந்த இடத்தை பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பசுத்தாய் கணேசன் பண்பாட்டுக் கல்லூரி துவங்க பல ஏக்கர் நிலத்தை தானமாக அளித்து கல்லூரி கட்டுவதற்கான செலவுகளையும் இவர் ஏற்றார். நமது நாடு அடிமைப்பட்டு மக்கள் பஞ்சத்திலும் வறுமையிலும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோதே சமுதாய அக்கறை கொண்டு தனது செல்வத்தை முனிவர்களின் கல்வி வளர்ச்சிக்கான சென்றடைய வேண்டும் என்ற சிந்தனையோடு 1942ஆம் ஆண்டு துவக்கப்பட்டது தான் ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகம் வி.வி.சி.ஆர். முருகோ முதலியார் மற்றும் அவரது உறவினர் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் சேர்ந்து, ஈரோடு செங்குந்தர் கல்விக் கழகத்தை 24.12.1942ஆம் ஆண்டு பதிவு செய்தனர். அதன் நிர்வாகத்தின் கீழ் முதன் முதலில் செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியை 1.6.1944 ஆம் ஆண்டு துவக்கினர் முருகேச முதலியார். #kaikolar_history instagr.am/p/CrVRZ00p6ZB/