View allAll Photos Tagged Homam
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் திருவோண ஹோமத்துடன் தைலாபிஷேகம் ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகருக்கும் பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானுக்கும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் , பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் காப்பு தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார்.
தைலக்காப்பு திருமஞ்சனம் :
வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜா அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர். இந்தச் சந்நிதியில் “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் மாதாந்திர திருவோண நக்ஷத்திரத்தில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்வது சிறப்பாகும்.
விநாயக தன்வந்திரிக்கு இன்று 28.07.2018 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு, திருவோண ஹோமமும், நல்லெண்ணையை கொண்டு தைல திருமஞ்சனமும் நடைபெற்றது.
திருவோண நக்ஷத்திரத்தில் ஸ்ரீ தன்வந்திரி விநாயகருக்கு அபிஷேகம் செய்த தைல பிரசாதத்தை உபயோகப்படுத்தி வந்தால் உடலில் ஏற்படும் வலிப்பு நோய், சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதி, சர்க்கரை நோய், புற்று நோய், குறை பிரசவம் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்கள், இதர வியாதிகளும் நீங்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
திருவோண ஹோமத்தில் பங்கேற்பவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் பெறுவார்கள். சந்திர தோஷம் இருந்தால் விலகிவிடும். சந்திரனின் அருள்பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி, இனிமையான வாழ்வு கிட்டும், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறைநீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வச்செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். பெண்கள் விரும்பியதை அடைவர். திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும். மேலும் கிரகண சாந்தியாக ஈஸ்வர ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், ப்ரத்யங்கிரா யாகம் மற்றும் சூரிய ஹோமங்கள், கோடி ஜப தன்வந்திரி ஹோமத்துடன் நடைபெற்று அந்தந்த தேவதைகளுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த பூஜையிலும் ஹோமத்திலும் ஜைன மடாலயம், திருமலை ஸ்வஸ்திஸ்ரீ தவளகீர்த்தி ஸ்வானிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Gnapathi bappa moriya.. mangala moorthy moria..
Taken from Shangumukham beach , Trivandrum , at the time of Vinayaka Chathurthi . Pooja begins....
Sri Maha Ganapathy Homam: performed to remove obstacles in one's life.
Navagraha Homam: performed to balance the impact of time on one's life.
Sri Maha Rudra Homam: performed to bring that much needed transformation, which enhances the experience of life.
Sri Maha Sudarsana Homam: performed to remove enmity from one's life.
Shatha Chandi Homam: performed for overall development in life.
Rishi Homam: performed to increase one's receptiveness towards wisdom.
Laksha Japa Maha Sudarsana Homam & Vaikunta Ekadasi Special Pooja. Former Governor Shri.V.Shanmuganathan Avl visit at Sri Danvantri Arogya Peedam Walajapet. Thanks to "DINAMANI, DINAKARAN, SAKSHI, MAALAI MALAR" Daily News Papers.
Kodi Japa Maha Danvantri Homam - 100th Day (28.10.2018)...
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமத்துடன் ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப ஹோமம் நிறைவு. மாண்புமிகு நீதியரசர் திரு. முரளிதரன் அவர்கள் பங்கேற்பு.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்“கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளால் நோய்கள் நீங்கி அனைத்து பயன்களையும் பெற சென்ற 19.07.2018 முதல் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 100 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்ரீ தன்வந்திரி கோடி ஜப யக்ஞம் இன்று 28.10.2018 காலை நிறைவு பெற்றது.
இன்று காலை 7.00 மணியளவில் வேத பாராயணம், கோபூஜை, திருப்பள்ளி எழுச்சி, யாகசாலை பூஜை, கலச பூஜை நடைபெற்று மஹா தன்வந்திரி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமத்துடன் 11.30 மணியளவில் மஹாபூர்ணாஹுதி நடைபெற்று, கலச புறப்பாடு செய்து ஸ்ரீ தன்வந்திரி மூலவர் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி மற்றும், சுதர்சனாழ்வாருக்கு பஞ்சசூக்த பாராயணத்துடன் 48 கலசங்கள் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் மதுரை கிளை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு.M.V. முரளிதரன் அவர்கள், திருமதி. முரளிதரன் அவர்கள், சென்னை நங்கநல்லூர் 108 சக்திபீட பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி ஸ்வாமிகள், சித்தஞ்சி தவத்திரு. மோகனானந்த ஸ்வாமிகள், திருவண்ணாமலை சீரடி சாயிபாபா ஆலய நிர்வாகி திரு. சாயி ரவிச்சந்திரன் அவர்கள், கொடுமுடி ஆட்சி பீடம் தவத்திரு. ராணியம்மாள், சென்னை தவத்திரு. Dr. கவி முரளிகிருஷ்ணன், சென்னை பெருங்கவிக்கோ சேதுராமன் அவர்கள், சினிமா தயாரிப்பாளர் தினேஷ் கார்த்திக், வாலாஜாபேட்டை Dr. குழந்தைவேல் குடும்பத்தினர், வேலூர் தென்னிந்திய புரோகிதர் சங்க நிர்வாகி திரு. V.R. சீதாராமன் அவர்கள், ஆற்காடு மஹாலக்ஷ்மி நர்சிங் கல்லூரி, லக்ஷ்மி லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், ஆந்திரா, கர்னாடக, கேரள, பாண்டிச்சேரி மாநிலத்தில் சேர்ந்த பக்தர்கள், தன்வந்திரி குடும்பத்தினர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் யாகத்தில் மூலிகைகளை சேர்த்து கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து பங்கேற்றவர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி புகைப்படவும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் விரைவில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழா பத்திரிகையை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெளியிட மேல்சித்தாமூர் ஜீனகாஞ்சி ஜைன மடாதிபதி திரு. லக்ஷ்மிசேன பட்டாரக்கர அவர்கள் பெற்று கொண்டு சிறப்பித்தார் விழா இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
தன்வந்திரி பெருமாளுக்கு பஞ்ச மூலிகை திருமஞ்சனம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி தன்வந்திரி பீடத்தில் நோய் நீங்கி ஆரோக்யம் பெற இன்று காலை 10.00 மணியளவில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு, தன்வந்திரி ஹோமத்துடன் ஒரு கற்ப மருந்தாகத் திகழும் நெல்லிக்காய் தீர்த்தத்துடன், கரும்பு, அருகம்புல், சந்தனாதி தைலம், வில்வம் போன்ற தீர்த்தங்களுடன் விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு :
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 46 லக்ஷம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி மந்திரங்களை கொண்டு, மந்திரமே யந்திரமாக விளங்கும் ஆரோக்ய பீடத்தில் 7அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பட்டுப் பீதாம்பரம், மலர் மாலைகள் தரித்த ஆபரணத்திருமேனியாக, 4 கரங்களில் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம், கீழ் இரு திருக்கரங்களில் ஒன்றில் அட்டை பூச்சியுடன் சீந்தல்கொடியும், மற்றொன்றில் அமிர்த கலசத்தினையும் தாங்கி பக்தர்களுக்கு திருகாட்சி அருள்கிறார்.
பிரதி ஏகாதசி திதியில் நெல்லிப்பொடி அபிஷேகம் இவருக்கு ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி திதியில் மஹா தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு மருத்துவ குணம் கொண்ட நெல்லி பொடி அபிஷேகத்துடன் பலவகை மூலிகை தீர்த்தங்களை கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இந்த பூஜையின்போது தன்வந்திரி பகவானை மனமுருக பிரார்த்தனை செய்து பூஜையில் அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதத்தினை உட்கொண்டாலே நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம் என்பது கண்கூடான உண்மையாகும்.
பல்வேறு நோய் தீர பஞ்ச மூலிகை அபிஷேகம் :
டயாபடீஸால் ஏற்படும் கண் பாதிப்புகளை தடுக்கவும். கணையத்தை தூண்டி, இன்சுலின் சுரக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், நீரிழிவு நோயை தடுக்கவும், நெல்லிப்பொடி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இரத்தம் சுத்தி அடையவும் கண் பார்வையில் தெளிவு பெறவும், இரத்த மூலம் நீங்கவும், சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகவும் தன்வந்திரி மூலவருக்கு அருகம்புல் சாரில் அபிஷேகம் நடைபெற்றது.
உடல் எடையைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், சுறுசுறுப்பாக இயங்கவும், கரும்பு சாரினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
உடல் சூடு தனியவும், மேக நோய்கள் விலகவும், மலட்டுத் தன்மை நீங்கவும் சந்தனாதி தைலத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
கண் வலி, கண் எரிச்சல் நீங்கவும், காச நோய் மற்றும் தொற்று வியாதிகளை தடுக்கவும், வில்வ தீர்த்தத்தினால் தன்வந்திரி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இந்த யாகத்திலும் பூஜையிலும் தன்வந்திரி பெருமாளுக்குரிய சீந்தல்கொடி இலை, துளசி, ஆலிலை, அரசஇலை, வில்வ இலை, விஷ்ணுகிராந்தி, நாயுருவி, மரிக்கொழுந்து, நக்ஷத்திர விருட்ச இலைகள், தேவதாரு இலை போன்ற இலைகளையும், செவ்வந்திப்பூ, செண்பகம், பிச்சிப்பூ, பாரிஜாதம், தாமரை, அரளி, பல்வேறு மூலிகைகள், நெய், தேன், பச்சரிசி, வெள்ளம், சுக்கு, மந்தாரை போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Laksha Japa Maha Sudarsana Homam & Vaikunta Ekadasi Special Pooja. Former Governor Shri.V.Shanmuganathan Avl visit at Sri Danvantri Arogya Peedam Walajapet. Thanks to "DINAMANI, DINAKARAN, SAKSHI, MAALAI MALAR" Daily News Papers.
Wordist Event Photography – Multi Camera Setup for Exclusive Candids, Memorable Moments, Professional Photography, Professional Event Photography, Professional Event Photographers | Client - Anusha Gopal and Ananth Lalithakumar
Wordist - #besurprised is a Digital Marketing and Creative Agency based in Shenoy Nagar, Chennai India. Wordist is spread into 5 Verticals - Brand Identity | Advertising | Production | Social Media Marketing | Events. And as an Advertising Agency, Wordist follows 3 rules - Simple, Ultra Fast and Affordable.
These are Photos taken at Ishaan’s Ayush Homam. The concept was to come up with a creative shoot and it is conceptualised, shot and designed by the Team #wordistphotos. And our client is Anusha Gopal and Ananth Lalithakumar. We were asked to come up with a creative design.
These are few of our creative designs and works and to all our dear Wordisters - you can expect our regular creative updates in this particular album of our page! So follow Wordist to see more of our updates. Want to know more or want anything to be Written, Printed, Designed or Filmed? Simple! Call us @ +91 90031 72100 | +91 44 43300 100 or mail us your requirements to sayhi@wordist.in and we shall meet up for a coffee or chai and perhaps talk business too!
Koti Japa Kubera Lakshmi Yagam - Navagraha Homam - Swarna Bhairavar Yagam ....
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் தாமரை விதைகள், தாமரை புஷ்பங்கள் கொண்டு ஒரு கோடி குபேர ஜப யக்ஞத்துடன் நவக்கிரக ஹோமம், சொர்ண பைரவர் யாகமும் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி நேற்று 14.11.2018 புதன்கிழமை முதல் இன்று 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெற்றது.
இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகத்தில் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டும் நவதான்யங்கள், நவமூலிகைகள் கொண்டு நவக்கிரக ஹோமமும், நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.