Back to photostream

ஒவ்வொரு மலரும்....

பெண்ணே நீ ஏன் பிறந்தாய்

பெண்ணே.....

பூத்த சில மணித் துளிக்குள்

மண்ணில் உதிர்ந்த மலரானாய்

 

பூபாளம் பாடும் நேரத்தில்

முகாரி ராகம் கேட்கிறதே

 

சீம்பால் அருந்தும் வேளையிலே

கள்ளிப்பால் உனக்கு யார் கொடுத்தார்

 

அரசாங்கப் பதிவேட்டிலே

அன்றே பிறந்து அன்றே மரித்ததாய்

அவசரமாய் பதிவானாய்

 

ஆணாய் வந்து பிறந்திருந்தால்

அரசாளப் பிறந்தவன் என

ஆர்ப்பரித்திருப்பார் உன் பெற்றோர்

 

பசு கன்றாய் பிறந்திருந்தால்

கனிந்திருப்பார் உன்னை வளர்ப்போர்

 

பறவையாக நீ இருந்தால்

தன்னிச்சையாய் வாழ்ந்திருப்பாய்

 

 

பட்டுப்பூச்சாய் பிறந்திருந்தால்

பலன் தரும் வரை காத்திருப்பார்

 

பெண்ணாய் பிறந்த பாவத்தால்

மண்ணில் உதித்த சில மணித்துளிக்குள்

விண்ணுலகம் உன்னை அனுப்பிவைத்தார்

மனசாட்சி அற்ற மனித இனம்

 

எழுதியவர் :வை .அமுதா

நாள் :2012-01-11 12:07:15

Source - eluthu.com/kavithai/53355.html

 

Have a great day.....

588 views
1 fave
0 comments
Uploaded on September 22, 2012
Taken on September 22, 2012