Back to photostream

பொங்கலோ பொங்கல் / Going home for vacation :)

Better details H E R E

 

Inspired from this shot. Its been a while since I have been to my hometown, me and my relatives we always make it a point to be in our hometown for Pongal(The festival of Harvest). Read more about Pongal. My Grandfather is a farmer and so Pongal is so special to us and we all make it a point to be in our village Thirukkurungudi. Most of my relatives, the count will come around 80, as some won't be able to make it this time will be assembling there, we don't do anything special, just sit around talk about the whole year that had gone past, we cook for everyone, there is a huge open space in front of the our home called Mutram, with a huge neem tree, which is as old as my grandfather, we just sit under that, eat, sleep together. Those are the moments which taught us how happy life can be. We wake up walk to our fields, take bath in our well, sit on our fields and enjoy the air. Every year once this festival is over, I see almost all my relatives in tears, I am not talking about kids, starting from my Grandfather and Mother everyone is in tears and they say to each other, just one more year and the next Pongal will be here. So every day, every second we start expecting the next Pongal. We have booked almost half a compartment in the train. Will meet you all after those wonderful days, enjoy your Pongal too.அனைவருக்கும் உளம்கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். Thanks for all your visits, favs and comments

 

அந்த ரயில் இங்கிருந்து கிளம்பையிலே கலைந்துவிடும் எங்களுக்கு தூக்கம்,

ஒவ்வொரு நிறுத்தம் வருகையிலும் எட்டிப்பார்ப்பேன் சீக்கிரம் வந்துறாதா என்ற நினைப்போடு,

விடிய ஊர் வந்து சேர்ந்ததும் எங்களுக்காக வந்து காத்திருப்பார் என் மாமா,

அங்கிருந்து வீடு சென்றதும் வாசலிலே நின்றிறுப்பார்கள் என் தாத்தாவும், பாட்டியும், அத்தையும்,

அவர்கள் தலைக்கு மேலாய் எங்கள் வீட்டு வேப்ப மரம்,

பகல் முழுக்க பரபரப்பாய் வேலை நடக்கும் பேசியபடியே,

இரவு வந்ததும் கோலமிட்ட படியே பேசிக்கொண்டிருப்பார்கள் என் அம்மா, சித்தி, பெரியம்மா, அத்தை, பாட்டி அனைவரும்,

தூக்கம் கண்களைச் சுழற்றுகையில் ஒரு கிழிந்த பாயை அந்த வேப்ப மரத்திற்கு கீழே போட்டு தொடரும் பேச்சு,

ஒரு நொடி கூட தொலைத்துவிடாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள்,

ஒரு வருடத்தின் மொத்தப் பேச்சையும் பேசிக் கழித்துவிட வேண்டும் என்ற வெறியோடு,

பள்ளிக்காலம் தொடங்கி நேற்று ரயிலில் சண்டையிட்டது வரை,

ஒரு புள்ளி மாறாமல் பறிமாறிக்கொள்வார்கள் பேச்சிலே,

சில சமயம் அவர்கள் பள்ளியில் நடித்த நாடகங்கள் கூட அரங்கேறும் பாட்டுக் கச்சேறியுடன்,

ஒயாமல் பேசியபடியே எப்போது தூங்குவார்களோ தெரியாது,

ஆனால் காலையில் நான் கண் விழிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் பேச்சு,

ஊர் கிளம்பும் நாள் வரையில் எங்கள் உலகத்தின் மகிழ்ச்சியை, யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் கொண்டாடி மகிழ்வோம்,

ஊர் கிளம்பும் நொடியில் அமைதியாய் வந்து எங்கள் வீட்டையே ஆக்கிரமித்திருக்கும் ஒரு அமைதி,

வெறும் கண்ணீர்த் துளிகள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும்,

அப்போதும் ஊமையாய் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டு வேப்ப மரம்,

எங்கள் அடுத்த வருட வரவை எதிர் நோக்கி

 

©Karthik'Z photography

10,093 views
37 faves
163 comments
Uploaded on January 7, 2010
Taken on December 27, 2009