Back to photostream

தைப்பொங்கல் - Pongal 2017

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழாவான இந்தப் பொங்கல் விழா சமயம் கடந்தது. பிற இந்து சமய விழாக்கள் போல நட்சத்திரத்தின் அடிப்படையிலோ, பஞ்சாங்க அடிப்படையிலோ, இஸ்லாமியப் பண்டிகைகள் போல பிறை பார்த்தோ வருவதல்ல. தை முதல் நாள்தான் பொங்கல். இதன் பின்னனியில் எந்தப் புராணக் கதையும் இல்லை. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

1,492 views
5 faves
1 comment
Uploaded on January 15, 2017
Taken on January 13, 2017