Sri Muralidhara Swamigal
Moksha Deepam for Sriranga Narayana Jeeyar Swamigal....

தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு மௌன அஞ்சலி...
ஸ்ரீரங்கம் கோவில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகள்(89) நேற்று 11.07.2018 முக்தி அடைந்ததை முன்னிட்டு இன்று 12.07.2018 வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பங்கேற்று மோக்ஷ தீபம் ஏற்றபட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்படட்து.
ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகள், முதுமை காரணமாக சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகட்சையுடன் மருத்துவர் ஆலோசனை பெற்று வந்தார். நேற்று இறைவனின் திருவடி சேர்ந்தார். ஸ்ரீ ராமனுஜருக்கு பின்னர் ஸ்ரீரங்க மடத்தில் 50 வது மடாதிபதியாக அலங்கரித்தவர். காஞ்சீ மடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இவரும் ஒரே பாடசாலையில் மாணவர்கள்.
ஸ்ரீ பஞ்ச ராத்ர ஆகமத்தில் கைத்தேர்ந்தவர். அரங்கன் சேவையில் தம்மை அர்ப்பணைத்து கொண்டவர். அடியார்களிடம் வேறுபாடு காணாமல் அனைவரையும் ஆட்கொண்டவர். ஸ்ரீவைஷ்ணவத்தை வளர்த்தவர். உலக நன்மைக்காக பல்வேறு விதமான தபசுகளை மேற்கொண்டவர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீரங்க நாராயண ஜீயர் ஸ்வாமிகளின் ஆன்மா சாந்தி அடையவும், அவரை பிரிந்து வாடும் அவருடைய சீடர்கள், பக்தர்கள் மன அமைதி பெறவும் ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர்கள் சார்பாக மோக்ஷதீபம் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தி, கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.