Back to photostream

THENI - ANDIPATTI - T.SUBBULAPURAM is our Native place - We love our Area and we welcome to our home town - Oviyar VASU ( Artist ANIKARTICK)

தி.சுப்புலாபுரம்

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரை போல வருமா!!!

தி.சுப்புலாபுரம் ஒரு வரலாறு

T Subbulapuram (Tamil: தி.சுப்புலாபுரம்) is one of the Villages in Andipatti Taluk in Theni District, Tamil Nadu State, India. Its located around 5 km from Andipatti town, 20 km from Theni and 57 km from Madurai.

 

இந்த கிராமம் எட்டு நூற்றாண்டுகள் பழமையான கிராமங்களில் ஒன்றாகும். இந்த கிராமத்தில் பல சாதி மக்கள் நட்புடன் வாழுகின்றனர். ஆகையால் இது ஒரு மதச்சார்பற்ற கிராமம் ஆகும்.

 

 

 

முன்னதாக இது சுப்பம்மாள்புரம்(Subbammalpuram) என அழைக்கபட்டது, அவரது மரணத்திற்கு பின்னர் அதை சுப்பம்மாள்-அல்லா-புரம்(Subbammal-Alla-puram) என அழைக்கப்பட்டு வந்து, தற்பொழுது இது சுப்புலாபுரம்(T.Subbulapuram) என அறியப்பட்டு வருகிறது. ஆரம்ப டி(T) என்ற எழுத்து திம்மிரசநாயக்கனுர்(Thimmarasanaickanur) கிராமத்தின் பிரிவின் கீழ் வருகிறது என்று குறிக்கிறது. இக்கிராமம் ஆண்டிபட்டி சட்டமன்றம் மற்றும் பெரியகுளம் மக்களவை தொகுதியில் இரண்டாவது அதிக வக்காளர்ளை கொண்டுள்ளது. இங்கு முக்கிய தொழில் விவசாயம் மற்றும் நெசவு ஆகும். அதிலும் காதி பொருட்கள் மிக பிரபலமானது. முக்கிய பயிர்கள் அரிசி, பருத்தி, கேழ்வரகு, தக்காளி, கத்தரிக்காய், முருங்கை காய், மிளகாய் போன்றவைஆகும். நெசவு மற்றும் விவசாயம் தி.சுப்புலாபுரம் மக்களின் வருமானதுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.இக்கிராமத்தில் பல கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்கள் உள்ளன.

 

கோயில்கள்: இது ஒரு சிறிய கோயில் நகரம். இங்கு நிறைய கோயில்கள் உள்ளன. அவற்றுள் சில முக்கியமானவை. பத்திரகாளியம்மன் கோயில்,பகவதியம்மன் கோயில் கந்தனாதசுவாமி கோயில் நாழிமலை பிள்ளையார் கோயில் தண்டாயுதபாணி கோயில் காளியம்மன் கோயில் கண்ணன் கோயில் சந்தனமாரியம்மன் கோயில் காட்டு கோயில் வாலகுருனாதர் கோயில் மாணிக்க சுவாமி கோயில் நல்லதங்காள் கோயில் பாலமுருகன் மற்றும் பாலவினாயகர் கோயில் முனியாண்டி கோயில் சித்தி வினயாகர் கோயில் குருவாச்சியம்மன் கோயில் மாரியம்மன் கோயில் மல்லையசாமி கோயில் கீழமடத்து பிள்ளையார் கோயில் களவாணி பிள்ளையார் கோயில் புனித தோமையார் ஆலயம் மற்றும் பல....

 

திருவிழாக்கள்:. பங்குனி பொங்கல் மற்றும் கந்த சஷ்டி ஆகியவை இப்பகுதி மக்கள் கொண்டாடும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும். ஒவ்வொரு பங்குனி மாத கடைசி வாரத்தில் பங்குனி பொங்கல் கொண்டாடப்படும், ஒவ்வொரு கார்த்திகை மாதம் மற்றும் திபாவளிக்கு அடுத்த வாரம் கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படும்.

 

2,163 views
0 faves
0 comments
Uploaded on December 13, 2013
Taken on December 13, 2013