Back to photostream

CHENNAI BOOK FAIR 2014 - 37TH CHENNAI BOOK FAIR 2014

 

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் 37 ஆண்டுகளுக்கு முன்பு பி.ஐ (B.I) பதிப்பகத்தின் திரு. மாத்யூ அவர்களின் முயற்சியால் சில பதிப்பாளர்கள் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. புத்தக ஆர்வலர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் Bapasi_logo-300x300விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இவர்கள் 24.08.1976-ல் ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

 

இந்தக் கூட்டமைப்பு சென்னை புத்தகத் திருவிழாவை முதலில் ஒரு சில உறுப்பினர்களுடன் அண்ணா சாலையிலுள்ள மதுரஸா யஏ – ஆலம் மேல்நிலைப் பள்ளியில் சிறியதாக ஆரம்பித்தது. அதற்கடுத்த 28 ஆண்டுகள் அதே வளாகத்திலுள்ள உள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரி மைதானத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

 

இதற்கு இருந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் இதர தென்னிந்திய மொழிகளில் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இந்தக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். எதிர்வரும் 10.01.2014 முதல் 22.01.2014 வரை நடைபெற உள்ள 37வது சென்னைப் புத்தகத் திருவிழாவை அதே ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரியில் 2,00,000 சதுர அடி பரப்பளவில் இன்னும் சிறப்பாக நடத்துவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியின்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவியரிடம் அவர்களது பேச்சு மற்றும் எழுத்துத் திறமைகளை வெளிக்கொணர்ந்து பாராட்டும் பரிசும் வழங்கும் பொருட்டு பல்வேறு நிலைகளில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தி, அவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக புத்தகங்களையும், கலந்துகொள்வோர் அனைவருக்கும் சான்றிதழ்களையும் பபாசி வழங்கி வருகிறது.

 

சின்னஞ்சிறார்களின் திறமைகளை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் ஓவியப்போட்டிகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு சிறந்த புகைப்படங்களுக்கான போட்டிகள் நடத்தவும், கட்டுரை, சிறுகதைப் போட்டிகள் நடத்தி அதில் தேர்ந்தெடுக்கப்படுபவற்றைப் புத்தகமாக வெளியிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

 

மக்களின் வாசிக்கும் பழக்கத்தைப் பரவலாக்கவும், சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புத்தகக் காட்சிகளின்போது தினமும் மாலை நேரத்தில் புகழ் பெற்ற பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது வாழ்விற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பெருந்தகையாளர்களை வரவழைத்து வாழக்கைக்குத் தேவையான கருத்துகளை எடுத்துச் சொல்ல ஏற்பாடுகள் செய்வதில் பபாசி மிகவும் பெருமை கொள்கிறது.

 

இந்த வருடம் நமது பாரம்பரியம் மிக்க கிராமியக் கலைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இது ஒரு கலாச்சார விழாவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் அது சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

ஆண்டுதோறும் புத்தக காட்சியின்போது சிறந்த எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், சிறந்த புத்தக விற்பனையாளர்களுக்கு பபாசி பரிசுகள் பலவற்றை வழங்கி கௌரவித்து வருகிறது. ‘பதிப்பகச் செம்மல்’ க.கணபதி விருது சிறந்த நூல் வெளியீட்டாளர்களுக்கும், பதிப்புச் செம்மல் மணிவாசகர் பதிப்பகத்தின் திரு.

 

மெய்யப்பன் விருது சிறந்த புத்தக விற்பனையாளருக்கும், அழ. வள்ளியப்பா விருது குழந்தைகளுக்கான சிறந்த நூல் எழுதியவருக்கும், ஆர்.கே. நாராயணன் விருது தமிழில் இருந்து ஆங்கிலத்துக்குச் சிறந்த முறையில் நூல்களை மொழி பெயர்த்தவருக்கும், சென்னை புத்தகக் காட்சியின்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திலிருந்து பாரி செல்லப்பனார் விருது சிறந்த இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2,978 views
0 faves
0 comments
Uploaded on January 8, 2014
Taken on January 8, 2014