Back to photostream

11482 - Bramadesam

ராஜராஜனின் மகன் ராஜேந்திர சோழனின் பள்ளிப்படைக் கோவில் காஞ்சீபுரத்துக்கு அருகில் பிரமதேசம் என்ற இடத்தில் இருப்பதாகக் கருதுவர். பிரமதேசம் கோவிலில் உள்ள கல்வெட்டொன்று ராஜேந்திர சோழனின் மனைவி வீரமாதேவி என்பவர் தனது கணவர் ராஜேந்திர சோழன் இறந்தபின் அவர் இறந்த இடத்தில் நெருப்பை மூட்டி தீப்பாய்ந்து உயிர் விடுகிறாள். அரசி வீரமாதேவியின் மனம் சாந்தியடைய அவரது அண்ணன் இக்கோவில் பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்றை வைக்கிறார். எனவே ராஜேந்திர சோழனின் பள்ளிப்படை காஞ்சீபுரத்திற்கு அருகில் இருந்துள்ளது. இக்கல்வெட்டு உள்ள பிரமதேசம் கோவில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதைக் கல்வெட்டு உறுதி செய்வதால் இக்கோவில் ராஜேந்திர சோழனின் பள்ளிப்படையாகக் கருத இயலாது.

3,864 views
3 faves
6 comments
Uploaded on March 30, 2022
Taken on March 27, 2022