Back to photostream

ஆசிரியர்களே உஷார்..! இனி மாணவிகளுக்கு எதிராக பாலியல் தொல்லையில் ஈடுபட்டால்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதி. கிருஷ்ணகிரியில் 13 வயது அரசுப் பள்ளி மாணவியை மூன்று ஆசிரியர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு, வேலூரில், இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து, ஆறு பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம், தூத்துக்குடியில் 5 மாணவிகளுக்கு உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் தொல்லை இப்படி மாணவிகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர்.

 

 

இருப்பினும் தமிழக சட்டப்பேரவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையிலும் சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம். தேர்வு மற்றும் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் தேவை மற்றும் பாதுகாப்பற்ற சூழலில் இருந்தாலும் மாணவர்கள் 14417 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று பள்ளி கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

 

 

கடந்த 2018ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கான உதவி எண் 14417 அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டம் தொடர்பான சந்தேகங்கள், தகவல்கள். மனநல ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை 14417 எண்ணிற்கு தொடர்புகொள்வதன் மூலம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

idp7news.com/teachers-beware-if-you-engage-in-sexual-hara...

33 views
0 faves
0 comments
Uploaded on February 12, 2025