Back to photostream

'போன மாசம்தான் தகனம் செய்தோம்; எப்படி உயிரோடு வந்த'?. இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர்!. திடீரென வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி.

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேலப்பாதி பகுதியில், கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அடையாளம் தெரியாத வகையில், ஆண் நபரின் சடலம் ஒன்று காவிரி ஆற்றில் மிதந்து வந்ததுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செம்பனார்கோவில் போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

 

போலீசார் விசாரணையில் ஆற்றில் மூழ்கி இறந்தது மருதூர் லட்சுமி நாராயணபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 62) எனக் கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இறுதி சடங்குகள் செய்து, செல்வராஜின் உடலை குடும்பத்தினர் தகனம் செய்துள்ளனர். ஆனால், நேற்று திடீரென திருப்பூரில் வேலை செய்து விட்டு மருதூர் கிராமத்திற்கு செல்வராஜ் வந்துள்ளார். அப்போது, இறந்ததாகக் கருதப்பட்ட செல்வராஜ் உயிரோடு வந்து நின்றதைக் கண்ட கிராமத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான், செல்வராஜ் என்று கருதி அடையாளம் தெரியாத ஒருவரின் உடலைத் தகனம் செய்தது தெரிய வந்துள்ளது.

 

 

Readmore: பீதியை கிளப்பும் HMPV வைரஸ்..!! இந்தியாவிற்குள்ளும் நுழைந்தது..!! 2 குழந்தைகளுக்கு பரவியது எப்படி..? முகக்கவசம் கட்டாயம்..!!

idp7news.com/we-cremated-last-month-how-come-alive-the-pe...

22 views
0 faves
0 comments
Uploaded on January 6, 2025