Back to photostream

சேலத்தில் அதிர்ச்சி!. கணவருடன் தகராறு!. 2 குழந்தைகளுடன் 7 மாத கர்ப்பிணி தற்கொலை!

சேலம் வாழப்பாடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த கர்ப்பிணி மனைவி இரு குழந்தைகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே நெய்யமலை, அக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயி ரவி (38) - மாதம்மாள் (30) தம்பதி. இவர்களுக்கு மனோரஞ்சனி (7), நித்யஸ்ரீ (3) என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் தம்பதிகளுக்கிடையே குடும்ப பிரச்னை காரணமாக இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியாக உள்ள மாதம்மாள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவனிடம் கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.. பின் ஒரு வாரத்துக்குப் பிறகு கணவர் வீட்டிற்கே வந்துள்ளார். இதைத் தொடர்ந்து மீண்டும் கணவருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

 

இதையடுத்து கடந்த 23ம் தேதி காலை வேலைக்குச் சென்ற கணவர் ரவி, மாலை வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது அங்கு மனைவியும், இரு குழந்தைககளும் இல்லாததால் அவர்களை தேடியுள்ளார். அப்போது வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் மனைவி, இரு குழந்தைகளும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார், 3 சடலங்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Readmore: ஒரே மொபைல் நம்பருடன் பல ஆதார் கார்டுகளை இணைக்க முடியுமா?. UIDAI விளக்கம்!

 

idp7news.com/shock-in-salem-argument-with-husband-7-month...

265 views
0 faves
0 comments
Uploaded on November 26, 2024