Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

#நாமக்கல் மாவட்டம் #குருசாமிபாளையம்

செங்குந்தர் மகாஜன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற

சோழ பேரரசின் ராஜகுரு,அரசவை அமைச்சர்

12 ம் நூற்றாண்டின்

கவிச்சக்ரவர்த்தி, கவிராட்சசன்

#செங்குந்தர் சமூக குலகுரு #ஒட்டக்கூத்தர்_முதலியார் அவர்களின் பிறந்தநாளான இன்று (18/08/24) குருபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட செங்குந்தர் மகாசன சங்க தலைவர்

திரு.மதிவாணன் அவர்கள் சுப்பிரமணியர் ஆலயத்தின் அருகில் உள்ள செங்குந்தர் சமுதாயக் கொடி கம்பத்தில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். செங்குந்தர் சமுதாய ஊர் பெரியதனக்காரர் திரு டி கே.ஏ தியாகராஜன் அவர்கள் செங்குந்தர் சமூக குலகுரு ஒட்டக்கூத்தர்செங்குந்தர் படத்திற்கு மாலை அணிவித்து குருபூஜை நடத்தினார் . விழாவில் பாரதி வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் திரு குணசேகரன். மருந்தாளுனர் திரு. பவானி.கோபால். பேராசிரியர். முனைவர். நாகராஜன், ஆசிரியர் கண்ணன், தமிழரசன் ஆகியோர் கவிச்சக்ரவர்த்தி

ஒட்டக்கூத்தரின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இனி வரும் காலங்களில் கவிசக்ரவர்த்தி ஒட்டக்கூத்தர் அவர்களின் படைப்புகளின் மேலான பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி போன்றவை நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விழாவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சரவணன், செயற்குழு உறுப்பினர் திரு R. ஜோதிகிருஷ்ணன். துணைத் தலைவர் திரு பாலப்பாளையம்.சுந்தரம், தோனமேடு இணைச் செயலாளர் திருஈஸ்வரன், சீராப் பள்ளி இணைச் செயலாளர் திரு தங்கவேலு, பாலப்பாளையம் பெரியதனக்காரர் திரு கணேசன், மற்றும் சமுதாய ஊர் காரியக்காரர்கள் பூஜையில் கலந்து கொண்டனர் , காரியக்காரர் குட்டி துரைசாமி நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது. விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த திரு பவானி கோபால் அவர்களுக்கும் திரு குட்டி துரைசாமி அவர்களுக்கும் நன்றி. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

தெரிவித்துக் கொள்கிறோம்

#செங்குந்தர்_வரலாறு_மீட்பு_குழு 🙏🙏🙏 instagr.am/p/C-0GpuOtwch/

5 views
0 faves
0 comments
Uploaded on August 18, 2024