Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

15 JULY பிறந்தநாள்

கல்விக்கண் திறந்த கர்மவீரர்

கு.காமராஜர்

-நினைவை போற்றுகிறோம்...

காலம் போற்றும் பெருந்தலைவர் முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரை முதல்வராக வர பாடுபட்ட செங்குந்த முதலியார்

 

சமூகத்தைச் சேர்ந்த இரண்டு தளபதிகள்

 

திருப்பத்தூர் க.அ.சண்முக முதலியார் ex MLA

 

குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் MLA

 

1. 1954 ஆண்டு தமிழகத்தில் ராஜாஜி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் யார் முதல்வராவது என்று பெரும் குழப்பம் தமிழகத்தில் ஏற்பட்டது. அப்போது காமராஜர் முதல்வராக வர வேண்டும் என்றால் 6 மாதங்களில் இடைத்தேர்தல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தலைவர் காமராஜருக்காக தானாக முன்வந்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து வெற்றிக்கு களப்பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் குடியாத்தம் ஏ.ஜே.அருணாச்சலம் முதலியார் ஆவார்.

 

2.செங்குந்த முதலியார் சமூகத்தினர் அதிகம் வாழும் தொகுதியான வேலூர் குடியாத்தம் தொகுதியில் காமராஜர் போட்டியிட வைத்து அவருக்காக அனைத்து செலவுகள் மற்றும் வேலைகளை செய்து எம்எல்ஏ -வாக வெற்றி பெற வைத்தவர் குடியாத்தம் திருமகள் நூற்பாலை மேலாண்மை இயக்குனர். திருப்பத்தூர் பெரியவர் கா.அ.சண்முகம் முதலியார் ஆவார்.

 

3.திருப்பத்தூர் வரும் போது முதல்வர் காமராசர் பெரியவர் வீட்டில் விருந்து சாப்பிட்டும், தங்கியும் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்றும் சமுதாய பணியில்: செங்குந்தர் வரலாறு மீட்பு குழு instagr.am/p/C9baP98oJdE/

14 views
0 faves
0 comments
Uploaded on July 15, 2024