Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

திருவண்ணாமலையில் முதன் முதலில் School கட்டிய செங்குந்தர் குல பெருநிலக்கிழார், கொடைவள்ளல்

#திருவண்ணாமலை_சாமி_முதலியார்

ஐயாவின் நினைவுதினம் இன்று(ஜூன் 28)

 

ஐயாவின் குடும்பம் பற்றிய குறிப்புகள்

அக்காலத்தில் வெள்ளைக்காரன் வந்து பள்ளிக்கூடங்களைத் திறந்தான் ஆனால் அவன் கிறிஸ்தவ மெஷினரி (மதத்தையும் பரப்பும் விதமாக) பள்ளிக்கூடங்களை ஆரம்பித்தான்

நம்முடையடைய ஆட்கள் வெள்ளைக்காரனிடம் 300 ஆண்டுகள் அடிமைப்பட்டுக் கிடந்தோம்.

 

அதுவும் 100 ஆண்டுகளுக்கு முன்பு

தி.சாமிமுதலியார் காலத்தில் ஊரில் பள்ளிக்கூடங்கள் இருந்ததில்லை

அப்படி ஓரிரு பள்ளிகள் இருந்தாலும் அவை திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

அதில் ஜமீன்தாரர் வீட்டுப் பிள்ளைகள்

பணக்காரர் செல்வந்தர் பணம் கட்டிப் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே படித்தார்கள் படிக்க முடிந்தது

ஆனால் பணக்கார் பணம் படைத்த

சாமி முதலியார் சாமான்யர்களும் படிக்க “விக்டோரியா இந்துபள்ளி என்ற பள்ளிக் கூடத்தைத் திறந்தார்

இன்றைக்கு 100 கோடிக்கான ரூபாய் மதிப்பு பெறும் அந்த பெரியஇடத்தையும் இந்த பள்ளிக்கு “தர்ம “மாக கொடுத்தார்.

இரண்டு தலைமுறைக்கு முன்னதாக திருவண்ணாமலை நகரத்தைக் சேர்ந்த பெரும்பாலனவர்கள் விக்டோரியா இந்து பள்ளியில் படித்தவர்கள் தான்

தி.சாமி முதலியாருக்கு மூன்று ஆண் பிள்ளைகள்

1. #டி_எஸ்_முத்துக்குமாரசாமி_முதலியார்

2. டி.எஸ். நாரயணசாமி முதலியார்

3. டி.எஸ். ராமு முதலியார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தை மாதம் மாட்டுப்பொங்கல் அன்று விடியற்காலை 5.30 மணியிலிருந்து 6 – 00 மணிக்கு

அண்ணாமலையாருக்கு நடைபெறும் முதல் ஆராதனை அபிஷேகம் முதல் மண்டகப்படி

தி.சாமி முதலியார் குடும்பத்து மண்டகப்படி தான்

ராஜ ( ராய ) கோபுரத்துக்கு வடக்கில் இருக்கும் திட்டு வாயிற்படியிலேயே இந்த முதல்மண்டகப்படிஆராதனை மாட்டுப்பொங்கல் அன்று சூரிய உதயத்தில் நடக்கும்

அந்தக் குடும்பத்து அபிஷேக ஆராதனை நடந்த பிறகுதான்உற்சவ மூர்த்திகளே

திருவூடலுக்கு போகும்

அப்படி இந்த ஊரின் முதல் குடும்பம் பெரிய குடும்பம் அந்தக் குடும்பம்

அந்தப் பெரிய குடும்பத்தின் மூத்த பிள்ளைதி.சாமிமுதலியாரின்முதல்மகன் டி.எஸ்.முத்துக்குமாரசாமி முதலியார் என்பவர் திருவண்ணாமலை நகரமன்ற தலைவராக பதவி வகித்தவர்

1929 முதல் 1939 வரை. instagr.am/p/C8thJnjJxTD/

9 views
0 faves
0 comments
Uploaded on June 27, 2024