Back to photostream

Sengunthar Kaikolar Mudaliyar community

தமிழிசைத் தேவாரப் பேரறிஞரும்,

சைவ சித்தாந்த உலகின் இசைஞானி என்று போற்றப்படும்

 

கலைமாமணி செங்குந்தர் குல

#தருமபுரம்_ப.சுவாமிநாதன் ஐயா அவர்களின் பிறந்த நாள் இன்று.

 

தஞ்சை ஜில்லா

நன்னிலம் வட்டம், வீராக்கண் கிராமத்தில் 29-5-1923-ம் ஆண்டு

செங்குந்த கைக்கோளர்

மரபில் மு.பஞ்சநாத முதலியார் -பார்வதி அம்மையார் தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த ராஜகோபால் என்ற ப.சுவாமிநாதன், தனது 12-வது வயதில் தருமபுர ஆதீன மடத்தில் சேர்ந்தார். அங்கு 24-வது மகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் தொண்டராகப் பணிபுரிந்துகொண்டே, தேவார பாடசாலையில் சேர்ந்து தேவாரம் பாடும் பயிற்சியை மேற்கொண்டார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின், முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று, தேவார இசைமணி பட்டம் பெற்றார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை இசைக் கல்லூரியில் 4 ஆண்டுகள் பயின்று, முதல் மாணவராகத் தேறிய அவர், சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். 1968-ல் தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலை ஆசிரியப் பணியில் இருந்து வெளியேறிய அவர், தமிழகமெங்கும் தேவாரப் பாடல்களைப் பாடும் திருமுறைப் பணிகளில் ஈடுபட்டார்.

 

தேனினும் இனிய திருமுறைகளை அவரது வாயினால் பாட கேட்பது பெரும் பாக்கியம். இன் நன்னாளில் அவரது நினைவை போற்றுவோம்.

 

திருச்சிற்றம்பலம்.

🙏🙏🙏 instagr.am/p/C7k-gQ5p3Fa/

10 views
0 faves
0 comments
Uploaded on May 30, 2024