sengundharkaikolar
Sengunthar Kaikolar Mudaliyar community
பேராசிரியர் கே.ஏ.நடராசன் செங்குந்தர் மறைந்தாரே
*****************************************
பேராசிரியர்.மு.நாகநாதன்
=============================
ஈரோடு என்றால் போராடு
என்ற உணர்வு தந்தை பெரியாரை
பின் பற்றுபவர்கள் போற்றிய பகுத்தறிவு நெறியாகும்.
மறைந்த நண்பர் நடராசன்
சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும்,
இறுதி வரை பகுத்தறிவு சார்ந்த போராட்ட உணர்வை பெற்று இருந்தார் .
அறிஞர் அண்ணா மீது பெறும் பற்றுக்கொண்ட பேராசிரியர் நடராசன் அண்ணா பிறந்தநாளில்
நேற்று இரவு காலமானார்.
பெரியார் மீது அளவற்ற மதிப்பை
வைத்து இருந்தார்.
தந்தை பெரியார் தலைமையில்
இவரது திருமணம் 1972 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இவரது வாழ்விணையர் பேராசிரியர்
மோகனா தேவியும் பெரியார்
கொள்கையை போற்றுபவர்.
பெரியார் காலத்தில் தொடங்கப்பட்ட
பகுத்தறிவாளர் கழகத்தின்
செயலராக நண்பர் கே.ஏ.நடராசன்
பணியாற்றினார்.
அன்னை மணியம்மையார்
ஆசிரியர் வீரமணியார்
ஆகியோரோடு அன்போடு பழகியவர்
பச்சையப்பன் கல்லூரியில் பொருளாதார முதுகலை
மாணவராக இருந்தபோது
திராவிட மாணவர் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக பணியாற்றிவர்.
சென்னை மாநிலக் கல்லூரியில்
பொருளாதார துணைப் பேராசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றி பின்பு ,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையில் 1987 ஆம் ஆண்டு இணைப்பேராசிரியாக இணைந்தார்.
பேராசிரியர் முனைவர் வேதகிரி சண்முக சுந்தரனாரிடம் தான்
முனைவர் பட்ட ஆய்வை முடித்தார்.
பொருளாதாரத்துறையின் 1987 ஆம் ஆண்டு நான் பொறுப்பேற்றேன்.
எனக்கு உற்ற துணையாக,நேர்மிக்க
பேராசிரியராகப் பணியாற்றினார் .
பெரியார் கொள்கையை சமரசமின்றி
கடைப்பிடித்தவர்.
பேராசிரியர் கே.ஏ.நடராசன்
மறைவு எனக்கு ஆழ்ந்த துயரத்தை அளித்தது.
சில மாதங்களுக்கு முன்பு
நண்பர் கே.ஏ.நடராசனை சந்தித்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டு இருந்தேன்.
அரை நூற்றாண்டு நட்பு
அறுந்து விட்டதே என்று துயர் கொள்கிறேன்.
அவரது வாழ்விணையர் பேராசிரியர் மோகனாதேவி
மகன் பொறியாளர் கே.ஏ.என்.ராசா
மகள் மணிமலர் ஆகியோருக்கும்,
அவரது அண்ணன் பொறியாளர்
கே.ஏ.மாரியப்பன், அவரது தம்பி கணக்காயர் கே.ஏ.முருகானந்தம்,
அவரது உறவினர்களுக்கும்
எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பெசன்ட் நகர்
மின் சுடுகாட்டில் இன்று மாலை 4.30 மணி
இறுதி அஞ்சலி நிகழ்வு நடைபெறும். instagr.am/p/CxUZZdNoJi0/