Back to photostream

வீர செங்குந்த மரபு

இன்று பிரிட்டீஸ் காரர்களை 34 #செங்குந்தர்_கைக்கோள_முதலியார்கள் மிரளவைத்த தினம் #வெள்ளையனே_வெளியேறு இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் கிராமத்தின் செங்குந்தர் கைக்கோள முதலியார்கள் பங்கு மகத்தானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தின் 78-வது நினைவு தினம் இன்று (ஆக. 22) கடைபிடிக்கப்படும் நிலையில், கடலையூர் மக்களின் தியாகத்தை வெளியுலகம் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய விடுதலை போராட் டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது. தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார். தமிழகத்திலும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பலர் தங்களை இணைத்துக் கொண்டு சிறை சென்றனர். கோவில்பட்டி அருகேயுள்ள கடலையூர் கிராமத் தில் 34 நெசவாளர்கள் #வெயிலுகந்த_முதலியார் தலைமையில் 1942 ஆகஸ்ட் 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் மீது ஆங்கிலேயர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் #சங்கரலிங்க_முதலியார் என்பவர் பலியா னார். ராமசாமி முதலியார், மாடசாமி முதலியார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். பங்கேற்ற அனைவரும் சிறைகளில் அடைக்கப்பட்டு பல்வேறு இன்னல் களுக்கு ஆளாக்கப்பட்டு சிறையில் கொலை செய்யப்பட்டனர். நினைவு ஸ்தூபி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கடலையூர் கிராமம் பெரிய அளவில் வெளி உலகத்துக்கு தெரியாமலே இருந்தது. தியாகி களின் வாரிசுகளுக்கு ஓய்வூதியம் வழங்கியதோடு அரசும் நிறுத்திக் கொண்டது. கிராம மக்களின் முயற்சி இந்நிலையில் தங்கள் ஊர் மக்களின் தியாகத்தை போற்றும் வகையில் நினைவு ஸ்தூபி அமைக்க கடலையூர் மக்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்கான நிதி அவர்களிடம் இல்லை. ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி தலைவர் ஜெ.சுத்தானந்தனை அணுகினர். அவரும் உதவ முன்வந்தார். இதையடுத்து கடலையூர் செங்குந்தர் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நினைவு ஸ்தூபி கட்ட கடந்த 2007-ம் ift.tt/3j2A6vk

28 views
0 faves
0 comments
Uploaded on August 22, 2021