Back to photostream

வீர செங்குந்த மரபு

#டி_பி_ஆறுமுகம்_முதலியார் exMLA (28.07.1929 – 18.08.2014) ஜூலை 28 ஐயா வின் பிறந்ததினம் #பிறப்பு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் செங்குந்தர் கைக்கோள முதலியார் சமுகத்தில் வீரபத்திரன் கோத்திரம் பங்காளிகள் தோக்கவாடியார். ரங்கசாமி முதலியார் – மீனாட்சியம்மன் தம்பதியரின் பேரனும், ர. பச்சியண்ணன் – வகிள்ளியம்மாள் தம்பதியரின் மகனாக (28.7.29) அன்று டி.பி! ஆறுமுகம் பிறந்தார். #வாழ்க்கை: கல்வி படித்து முடித்து தனலட்சுமி அம்மாள் என்பவரை டபிருமனம் செயதார். இவருக்கு மொத்தம் மல்லிகாதேவி, பூங்கோதை, ராஜேஸ்வரி, மோகனசுந்தரி, யசோதா, தங்கமணி என்று ஆறு பெண் குழந்தைகள். தனது குழத்தொழிலான ஜவுளி தொழிலை சிறப்பாக செய்து “திருமகள் சைசிங் மில்” என்று நிறுவனத்தை சிறப்பாக நடத்தி வந்தார் சிறு வயதில் இருந்து அரசியலில் ஆர்வம் உள்ள இவர் திமுக கட்சி யில் இணைந்து பணியாற்றி பல கட்சி பதவிகளில் இருந்தார். 1967ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக சார்பில் க. அன்பழகன் திருச்செங்கோடு மக்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டர். தொகுதிக்கு சமபநத்தம் இல்லாத க. அன்பழகனுக்கு தீவிர பிரச்சாரம் செய்து தேர்தலில் க. அன்பழகனை டி.பி. ஆறுமுகம் வெற்றிப்பெறச் செய்தார். கட்சியில் சிறப்பாக உழைத்து திமுக சார்பில் திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் பதவிக்கு இரண்டு முறை போட்டியிட்டு 12ஆண்டுகள் நகர்மன்ற தலைவராக சிறப்பாக பணியாற்றினார். (1967-1976) (1986-1991) நகர்மன்ற தலைவராக இருந்த போது சிறப்பாக பணியாற்றி மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். பல நூறு ஆண்டுகளாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பல நூறு ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாத அர்த்தநாரீஸ்வரர் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தார். சிறப்பாக நகர்மன்ற தலைவராக பணியாற்றிய காரணத்தால் 1996ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ வாக வெற்றிப்பெற்றார். செங்குந்தர் கைக்கோள முதலியார் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்க்காக திருச்செங்கோட்டு செங்குந்தர் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து 16 ஆண்டுகள் அதன் செய்யலாளராக இருந்தார். 19ஆண்டுகள் திருச்செங்கோடு செங்குந்தர் கல்வி அறக்கட்டளையின் செய்யலாளராக பணியாற்றினார். 72 செங்குந்தர் நாட்டின் ஒன்றான எழுக்கரைநாட்டின்(திருச்செங்கோடு) நாட்டாண்மைக்காரராக பதவி வகித்தவர் ift.tt/3rDCgnE

62 views
0 faves
0 comments
Uploaded on July 28, 2021