Back to photostream

வீர செங்குந்த மரபு

#புரட்சிக்_கவிஞர் #பாரதிதாசனின் மகன் #மன்னர்_மன்னன்_முதலியார் ஐயாவின் நினைவு தினம் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மைந்தரும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப்போராட்ட வீரருமான மன்னர் மன்னன். மன்னர் மன்னன் முதலியார் என்கறி கோபதிக்கு வயது 92 வரை வாழ்ந்தவர். ஏறத்தாழ #50_நூல்கள் எழுதியுள்ளார். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பில் இருந்தார். புதுவைத்தமிழ்ச்சங்கத்தில் தலைவராகப் பல ஆண்டுகள் பொறுப்பில் இருந்து அதற்கு சொந்தக்கட்டடம் கட்டித் தந்தார். தமிழக அரசின் திரு.வி.க விருது, #கலைமாமணி_விருது, #புதுச்சேரி அரசின் #தமிழ்மாமணி #கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். மிகச் சிறந்த #பேச்சாளர் #எழுத்தாளர் #கவிஞர் . பாரதிதாசனின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதி வெளியிட்டார். இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டதியாகி. மொழிப்போர் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். தமிழறிஞர்கள் பலருடன் நெருங்கிப் பழகிய இவர் காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆர்., ஜெயலலிதா, தலைவர்கள் நெடுஞ்செழியன் , அன்பழகன் போன்றவர்களுடன் பழகி அவர்களின் அன்பைப் பெற்றார். இவருக்கு செல்வம், தென்னவன், கவிஞர் பாரதி ஆகிய மகன்களும் அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர். ift.tt/36iVRjn

35 views
0 faves
0 comments
Uploaded on July 6, 2021