Back to photostream

1310748-16029477969044

தன் கட்சிக்காரர்தான் என்று தெரிந்ததும் அந்த பாய்ச்சல் ஏன் நின்றுவிட்டது என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா. அதே நேரத்தில், கூட்டணிக்காக திருமாவளவனும் வாய்மூடிக்கொண்டு இருக்கிறாரே என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

 

தெற்குத்திட்டை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பழ.கருப்பையா, அண்மையில் ஒரு பஞ்சாயத்து தலைவராக இருக்கிற பெண்மணி, தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக தன்னை பஞ்சாயத்து கூட்டங்களில் தரையில் அமர வைத்ததாக குற்றம்சாட்டினார். இது பெரிய கண்டத்துக்குள்ளானது. மறுநாளே ஸ்டாலின், எடப்பாடி ஆட்சியின் லட்சணத்தை பார்த்தீர்களா என்று பரபரப்பு அறிக்கை விட்டார்.

 

twitter.com/mkstalin/status/1315328896603054080

 

அந்த பெண்மணியை அப்படி தரையில் உட்கார வைத்து அவமதித்ததே உங்க கட்சிக்காரர்கதான் என்று அதிமுக காரர் அறிக்கை விட்டதும், ஸ்டாலினோட வாய் அடங்கிவிட்டது.

 

எடப்பாடி கட்சிக்காரர் என்று நினைத்தேன்; ஆனால், அது நம் கட்சிக்காரர்தான் என்று தெரியவந்திருக்கிறது என்று சொல்லிவிட்டு, உடனே அவரை வெளியேற்றிவிட்டு, திமுகவில் இதுபோன்ற கருத்துடையவர்கள் இப்போதே வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்க வேண்டாமா? ஸ்டாலின் அதை ஏன் செய்யவில்லை.

 

எடப்பாடி அரசு மீது பாய்ந்த ஸ்டாலின், தன் கட்சிக்காரர்தான் என்று தெரிந்ததும் அந்த பாய்ச்சல் ஏன் நின்றுவிட்டது’’என்று கேள்வி எழுப்பும் அவர்,

 

ஆக, தவறான கருத்தின் மீது உங்களுக்கு ஆவேசம் வரவில்லை. எடப்பாடியின் ஆட்சியை இறக்க வேண்டும், தான் ஆட்சியில் அமர்ந்து பெரும் பொருள் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர, வேறொன்றுமில்லை.பஞ்சாயத்து www.vconnectnews.com/tamilnadu/stalin-not-warned-views-DM...

792 views
0 faves
0 comments
Uploaded on October 17, 2020